கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில், மல்கின்கிரி மாவட்டம் கோடமடேரு கிராமத்தில் வாழும் கிறித்தவ மக்களை 2000 பேர் கொண்ட ஒரு கும்பல் தாக்கியதில், ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் எனவும், 20-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒடிசாவில் பல்வேறு பகுதிகளில் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கிறித்தவச் சமூகங்களின் பாதுகாப்பு என்பது மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன.