ஜூன் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிரியாவில் உள்ள தமஸ்கஸ் நகரிலுள்ள தூய எலியா கிரேக்க ஆலயத்தில் வழிபாட்டில் கலந்துகொண்ட ஒருவர், மனித வெடிகுண்டுகளால் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 52 பேர் காயமடைந்ததாகவும், இந்தப் பயங்கரவாத செயலைச் சிரியா நாட்டின் இடைக்கால அதிகாரிகள் பொறுப்பேற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கிறித்தவச் சமூகங்கள் மற்றும் அனைத்து மதச் சமூகங்களின் பாதுகாப்பு உறுதி செய்வதில் நடவடிக்கைகள் செலுத்தப்பட வேண்டும் என்றும் கிரேக்க வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.