ஜூலை 25, 26 ஆகிய நாள்களில் பிரான்சின் வானேஸ் மறைமாவட்டத்தில் உள்ள அவுரேபியில் பிரிட்டன் இவான் நிக்கோலஸ் என்னும் விவசாயிக்கு புனித அன்னா காட்சியளித்ததன் 400-வது ஆண்டுத் திருவிழா வழிபாட்டு நிகழ்வுகளுக்குத் திருத்தந்தையின் சார்பில் பங்கேற்க கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அங்கு வந்து குடும்பங்களில் நம்பிக்கை, எதிர்நோக்கு, தொண்டு ஆகியவற்றை வளர்த்து உயிர்ப்பிக்க வலியுறுத்தினார் என்றும் திருத்தந்தை 14-ஆம் லியோ மொழிந்துள்ளார்.