சூடானின் ‘சேவ் த சில்ட்ரன்’ (குழந்தைகளைப் பாதுகாப்போம்) அமைப்பின் தேசியத் துணை இயக்குநர் பிரான்சிஸ்கோ லனினோ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பல ஆண்டுகளாக சூடான் நாட்டுக் குழந்தைகள் அடிப்படைக் கல்வியை இழந்துள்ளனர் என்றும், இது அவர்களின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குப் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும், இதற்குச் சூடானில் போர் நிறுத்தத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கவும் இந்த அமைப்பு அழைப்பு விடுக்கிறது என்று தெரிவித்தார்.