“இயேசுவின் புதுமையின் அடையாளம், பகிர்வின் மூலமாகத் தானேயொழிய, பேராசையால் அனைத்தையும் சேர்த்துக்கொள்ள விரும்புவதால் அல்ல.”
- ஜூன் 30, ஐ.நா.வின்
உணவு
மற்றும்
வேளாண்
நிறுவனத்தின்
கூட்டம்
“உக்ரேனிய மக்களின் நம்பிக்கை, அழிவின் இடிபாடுகளுக்கு மத்தியில் கடவுளின் வல்லமை வெளிப்படுகிறது என்பதற்கான அடையாளம்.”
- ஜூலை 2, உக்ரேனிய கத்தோலிக்க
ஆயர்
மாமன்ற
உறுப்பினர்
சந்திப்பு
“நாம் வாழ்வின் சரியான பாதையைக் கண்டுகொண்டு, கிறிஸ்து மற்றும் நற்செய்தியிலிருந்து நம்மைத் தூரமாக விலக்கிச் செல்பவை அனைத்தையும் அகற்றுவோம்.”
- ஜூலை 3, ஜூலை மாத
செபக்கருத்து
“வேற்றுமைகள் பலவற்றைக் கடந்து எல்லாரும் ஒருவரையொருவர் மதித்து வாழ்வோம்.”
- ஜூலை 4, குழந்தைகள் மற்றும்
இளையோரைக்
கோடை
முகாமில்
சந்திப்பு
“வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசு கிறிஸ்துவே நமது அனைத்துக் கலாச்சார முயற்சிகளின் அளவுகோலாக இருக்கின்றார்.”
- ஜூலை 5, மறைமாநிலப் பேரவைச்
சந்திப்பு
“நற்செய்தியின் நம்பிக்கை அனைத்து மக்களுக்கும் உரியது.”
- ஜூலை 6, மூவேளைச் செபம்