குரல் எழுப்பு...
உரிமைகள்
மறுக்கப்படும்போது!
உடைமைகள்
சூறையாடப்படும்போது!
உணர்வுகள்
காயப்படும்போது!
உண்மைகள்
புதைக்கப்படும்போது!
குரல்
எழுப்பு...
நீதி
சாகடிக்கப்படும்போது!
ஆள்பலம்
ஒன்றுசேரும்போது!
மனிதர்கள்
தாழ்த்தப்படும்போது!
மனிதனை
மனிதனே
மதிக்காதபோது!
உரக்கக்
குரல் எழுப்பு...
‘உன்
எதிரொலி’
எளியவருக்கு
இரங்கட்டும்!
வாழ்விழந்தவர்களுக்கு
வாழ்வாகட்டும்!
அடிமைகளுக்கு
விடுதலையாகட்டும்!
நானிலமெங்கும்
அமைதி பிறக்கட்டும்!