எனது முகத்தில்
எழுதப்படுகிறது
அவ்வப்போது
உங்கள்
முகங்களின்
முகவரிகள்!
துடைத்துக்கொள்கிறேன்
அடிக்கடி
மனித
அழுக்கின்
கறைகளை!
இப்படிக்குக்
கவிதை!
எளிதில்
எல்லாரையும்
மன்னியுங்கள்!
எளிதில்
யாரையும்
நம்பாதீர்கள்!
உண்மையாக
நேசியுங்கள்!
உரக்கச்
சிந்தியுங்கள்!
சத்தமாகச்
சிரியுங்கள்!
சுத்தமாகச்
சுவாசியுங்கள்!
சுயமாக
யோசியுங்கள்!
ஆழ்ந்து
செபியுங்கள்!
தீரத்தோடு
துணியுங்கள்!
தீர்ந்த
பிறகும்
நம்புங்கள்!
நன்றாக
வாழுங்கள்!
இல்லாத
ஒன்றிற்காய்
மாளிகை
மாடங்களும்!
விண்முட்டும்
கோபுரக்
கலசங்களும்!
குடியிருக்க
இல்லையொரு
வீடு!
மானங்காக்க
இல்லையொரு
கோவணம்!
அதனாலென்ன?
கொடுத்தது
நாடாகவும்
உடுத்துவது
நிர்வாணமாகவும்தான்
இருந்துவிட்டுப்
போகட்டுமே!
அதனால்
என்ன?
உன்னைச்
சுற்றி இருக்கும்
தடைகளைவிட
உனக்குள்ளே
இருக்கும்
திறன்
ஆற்றல்
மிக்கது!