2025, ஜூலை 8 அன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க பூண்டி மாதா பேராலயத்தில், தமிழ்நாடு ஆயர் பேரவை (TNBC), தமிழ்நாடு துறவிகள் கூட்டமைப்பு (TNCRI) உறுப்பினர்கள் கலந்துகொண்ட விழாவில், 107-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றதும், ஆஸ்கர் விருதுக்குத் தகுதி பெற்றதுமான இயக்குநர் டாக்டர் ஷெய்சன் பி. ஊசூப் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் சாண்ட்ரா டிசூசா இராணா அவர்களின் பெருமுயற்சியோடு உருவாக்கப்பட்ட சமூக நீதிக்காகத் தன்னை அர்ப்பணித்த அருளாளர் இராணி மரியாவின் வாழ்வை உணர்ச்சி பொங்கச் சித்தரிக்கும் ‘The Face of the Faceless’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது.
இப்படத்தின்
தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை உருவாக்க உதவிய அருள்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்களுக்கும், மாதா டிவி குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆசிர்வதிக்கப்பட்ட
இராணி மரியாவின் வாழ்க்கை மற்றும் தியாகத்தை நினைவூட்டும் இத்திரைப்படம் மன்னிப்பு, நம்பிக்கை மற்றும் சமூகநீதி போன்ற கிறித்தவ மதிப்பீடுகளை மக்களிடையே பரப்புகிறது. இந்தச் சிறப்பு மிக்க நிகழ்வில் ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் இறைமக்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.