news-details
இந்திய செய்திகள்
இந்தியாவில் கிறித்தவர்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டைத் தடுக்க ஒரு சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கடுமையான மதமாற்றத் தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து அம்மாநில வருவாய்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன் குலே மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், கிறித்தவத் தலைவர்களிடமிருந்து எதிர்வினைகள் எழும்பிய நிலையில், நாக்பூர் பேராயர் எலியாஸ் கொன்சால்ஸ், “நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மதச்சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமைகளை நிறைவேற்றுவதுதான் அரசின் கடமையே தவிர, மதச்சுதந்திரத்தை அடக்குவதற்குப் புதிய சட்டங்களைக் கொண்டு வருவது அல்லஎன்று கூறியுள்ளார்.