news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தியாவிலுள்ள அறியப்பட்ட மொழிகளில் எழுத்துரு பெற்ற முதல் மொழி தமிழ்தான். அது ஆதாரப்பூர்வமாக  நிரூபிக்கப்பட்டது.  இப்பெருமையை நாம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், உண்மையான பெருமைகளை உணராமல் இருப்பதும், இல்லாத பெருமைகளைத் திரும்பத் திரும்ப எடுத்துக்கூறுவதுமான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் இலக்கியம் நம் வளமை; நம்  பெருமை. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் கற்றவர்களால்-கற்றவர்களுக்காக எழுதப்பட்டது. ஆனால், திருக்குறள் போன்ற நூல்கள் கற்றவர்களால் மற்றவர்களுக்காக எழுதப்பட்டது. பாரதியார் ஒருவரே சரியாக நம் உணர்வை வரிசைப்படுத்தினார்: ‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு, என் மொழி, என் இனம், என் நாடுஎன்று வரிசைப்படுத்தினார். இந்த வரிசை இருக்கும் வரை நாட்டுப்பற்று  குறையவே குறையாது. ஆகவே, இந்த வரிசை சரியாக இருக்க வேண்டும்.” 

- உயர்திரு. பாலச்சந்திரன் ... (ஓய்வு), எழுத்தாளர்பேச்சாளர்

தோற்றுப்போகாதே! படிப்பில் மட்டும் தோற்றுப்போகாதே! தோற்றுப்போனால், அடுத்தவர்கள் நினைப்பதுபோல்தான் நம் வாழ்க்கை அமையும். வெற்றியடைந்தால் நாம் நினைப்பதுபோல நம் வாழ்க்கையை வாழலாம். இப்போது அது புரியாது; இளம் வயதில் அது புரியாது. ஆனால், புரிந்தவர்கள் வெற்றி அடைகிறார்கள். வாழ்க்கையில் முன்னேறி, அதிகாரம் என்ற எல்லைக்குள் போய் பொருளாதாரத்தில் பெரியவர்களாக இந்த நாட்டையும் இந்தக் குடும்பத்தையும் காப்பாற்றுகின்ற அத்தனை ஆளுமைகளுக்கும் அடித்தளமாக அமைந்தது கல்வியே!”

- முனைவர் திருமதி. பர்வீன் சுல்தானா, கல்வியாளர்

கடவுள்கள் சரியாகத்தான் உள்ளனர். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. தொல்லியல் துறையினர் மதுரை - திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த மலை அனைவருக்கும் பொதுவானது.”

- நீதிபதிகள் எஸ். ஸ்ரீமதி, ஜே. நிஷாபானு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு