news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (04-05-2025)

அன்பு என்பது எப்போதும் ஓர் அர்ப்பணிப்பு, அன்புடன் மற்றவரை நாம் சந்திக்கச் செல்லும்போது ஏதாவது ஒன்றினைக் கண்டிப்பாக நாம் இழக்க வேண்டியிருக்கும்.”

- ஏப்ரல் 16, புதன் மறைக்கல்வி உரை

இயேசுவின் உயிர்ப்பு என்னும் ஒளி நிறைந்த தளிர் நம் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனைக் கவனமாகப் பாதுகாத்து வளரச்செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.”

- ஏப்ரல் 19, உயிர்ப்புப் பெருவிழா  திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

இந்த உலகம் வன்முறை மற்றும் தீமைகளால் மிகக்கொடியதாக மாறினாலும், கடவுள் நமது வாழ்க்கைப் பாதையில் நம்மோடு உடன் பயணிக்கின்றார் என்னும் மகிழ்வின் நற்செய்தியை எடுத்துரைப்பதே இயேசுவின் உயிர்ப்பு.”

- ஏப்ரல் 19, உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

தீமை என்பது நமது வாழ்விலிருந்து மறைந்து விடவில்லை, அது நம் வாழ்வின் இறுதிவரை இருக்கும். ஆனால், கடவுளின் அருளை வரவேற்று ஏற்பவர்களின் வாழ்வில் அது ஒருபோதும் அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்தாது.”

- ஏப்ரல் 20, ‘ஊருக்கும் உலகிற்கும்  என்ற சிறப்புச் செய்தி

உயிர்ப்பு என்பது வாழ்க்கையின் விழா. கடவுள் நம்மை வாழ்வதற்காகப் படைத்தார், மனிதகுலம் மீண்டும் உயர வேண்டும் என்று விரும்புகிறார். அவரது பார்வையில் ஒவ்வோர் உயிரும் விலைமதிப்பற்றது.”

- ஏப்ரல் 20, ‘ஊருக்கும் உலகிற்கும்  என்ற சிறப்புச் செய்தி