காசா பகுதியில் மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல்கள் குழந்தைகளைப் பெருமளவில் பாதிப்படையச் செய்துள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தொடங்கியதிலிருந்து 15,613 குழந்தைகள் கொல்லப்பட்டனர், 33,900 குழந்தைகள் காயமடைந்தனர். 20,000 குழந்தைகள் அனாதைகளாக மாற்றப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீனிய நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புனித
பூமி பொறுப்பாளர் அருள்பணி. பால்த்தாஸ், குழந்தைகளின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். காசா பகுதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள குழந்தைகளுக்கு உதவிகள் வழங்க திரு அவை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. “குழந்தைகள் கொல்லப்படும் குற்றம் மனிதகுல வரலாற்றில் அழிக்க முடியாத பாவமாக இருக்கும்”
என அருள்பணி. பால்த்தாஸ் கூறியுள்ளார். இத்தாலி நாடு, காசா குழந்தைகளுக்குச் சிகிச்சை வழங்கி உதவி செய்து வருகின்றது.