“லெமூரியா கண்டம் என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக வரலாறு கூறுகிறது. உலகின் முதல் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டது தமிழ்மொழி. உலகின் முக்கியப் படைப்புகளைக் கொடுத்த மனிதர்களைத் தந்ததும் தமிழ் மொழியே. தமிழ்நாட்டு மக்கள் சமத்துவத்தையே எப்போதும் விரும்புகிறார்கள்.”
- உயர்திரு. ஆர். மகாதேவன்,
உச்ச நீதிமன்ற நீதிபதி
“அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து மோடி அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மற்ற நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பை மேற்கொண்டுள்ளார். இந்தியாவும் தனது சந்தை மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, சீனா உள்ளிட்ட பிற நாடுகள் மீது அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை மிகப்பெரிய சவாலாக உள்ளது. பொருளாதாரம் குறித்து அரசு தரப்பில் பொய்யான விவரங்களே வெளியிடப்படுகின்றன.”
- உயர்திரு. அகிலேஷ் யாதவ்,
சமாஜ்வாதி கட்சித் தலைவர்
“கடந்த
2020-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021-இல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2025-ஆம் ஆண்டு தொடங்கியும் இதுவரை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. தற்போது மத்திய அரசிடம் இதரப் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த எந்த விவரமும் இல்லை. எனவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய
அரசு உடனடியாக நடத்த வேண்டும்.”
- உயர்திரு. முகமது சலீம்,
மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்
குழு
உறுப்பினர்