news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை, நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது மிகவும் அலட்சியம் கொண்ட ஓர் அரசின் உண்மை முகத்தை மறைப்பதாகவே உள்ளது. கட்டுப்பாடற்ற அதிகாரக் குவிப்பு என்பது கடந்த பத்து ஆண்டுகளாக இந்த அரசின் செயல்பாடுகளின் அடையாளமாக மாறி உள்ளது. அதிகாரக் குவிப்பின் தீங்கு நிறைந்த விளைவுகள், கல்வித்துறையில் முக்கியமாக எதிரொலித்துள்ளன.”

- திருமதி. சோனியா காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர்

அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள்... என்று ஒன்றிய அரசு கூறியது. பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்துடிஜிட்டல் இந்தியாஎன்றார்கள். அடுத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள்; குறைவான இருப்புத்தொகை என்று கூறி அபராதம் விதித்தார்கள். தற்போது அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி .டி.எம்.மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ. 23 வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஏழைகளுக்கு வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்து வருகிறது. இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல; இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் .டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப் படுகிறது. ஆனால், எட்டாம் வகுப்பு வரை தமிழ் பாடத்தைக் கற்பிக்க தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் தனியாக ஏற்படுத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிச் சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும், அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தனியார் பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் தமிழாசிரியர்களுக்கு வேலை கிடைக்காததற்கு இதுதான் காரணம். அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாகத் தமிழ் ஆசிரியர் பணி இடங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்.”

- உயர்திரு. மருத்துவர் இராமதாஸ், பா... நிறுவுநர்