“அமைதி, இரக்கம் மற்றும் பணிவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அவர், வறுமை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சேவைக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.”
- ஆளுநர் ஆர்.என்.
ரவி
“அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. இலட்சக்கணக்கான மக்களிடம் அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையைக் கொண்டு சென்றவர்.”
- திரு. எடப்பாடி பழனிசாமி
(அ.தி.மு.க.)
“தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சேவைக்காகவும், சமூகச் சமத்துவத்துக்காகவும், மத நல்லிணத்துக்காகவும் அர்ப்பணித்து அயராது
உழைத்தவர் போப் பிரான்சிஸ்.”
- திரு. நயினார் நாகேந்திரன்
(பா.ச.க.)
“உலகில் நலிவடைந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் போப் பிரான்சிஸ்.”
- மருத்துவர் ச. இராமதாஸ்
(பா.ம.க.)
“இரக்கம் மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தியவர். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான
அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையே உரையாடலை மேற்கொள்ள அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்தன.”
- முதல்வர் மு.க.
ஸ்டாலின்
“கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.”
- திரு. கு. செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ்)
“போப் பிரான்சிஸ் மறைவு கிறித்தவர்களுக்கு மட்டுமன்றி ‘சகோதரத்துவம் மற்றும் உலக அமைதி’ ஆகிய வற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.”
- திரு. தொல். திருமாவளவன்
(வி.சி.க.)