திருநங்கைகள் தினமான மார்ச் 31 அன்று ‘டிரான்ஸ்சென்டர்’ என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை அதிகாரியான கே. பிரித்திகா அவர்களின் பயணத்தை விவரிக்கிறது.
அருள்தந்தை
எர்னஸ்ட் ரொசாரியோ ச.ச. இயக்கியுள்ள
இந்த 28 நிமிட ஆவணப் படமானது திருநங்கை சமூகத்திற்கான சவால்களை எடுத்துக்காட்டுகின்றது. இந்த ஆவணப்படம் பல
சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.