news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.04.2025)

ஒன்றாகத் துன்பத்தை எதிர்கொள்வது நம்மை மனிதர்களாக ஆக்குகிறது; வலியைப் பகிர்ந்துகொள்வது புனித வாழ்வுப் பயணத்தின் ஒரு முக்கியமான படி.”

- ஏப்ரல் 6, உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலி மறையுரை

வாழ்வில் சோதனைகள் மற்றும் துன்பங்கள் அதிகமாகும்போது, கடவுளின் அருளும் அன்பும் நம்மை இன்னும் நெருக்கமாகப் பிடித்து வாழ்வில் உயர்த்துகின்றன.”

- ஏப்ரல் 6, உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலி மறையுரை

இயேசு நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் பார்க்கின்றார். நாம் இருப்பது போலவே நம்மை அன்பு செய்கின்றார்.”

- ஏப்ரல் 9, புதன் மறைக்கல்வி உரை

ஆறுதல் மற்றும் மீட்பின் தோற்றுவாயாக விளங்கும் திருச்சிலுவையில், ஆண்டவராகிய இயேசுவைத் தியானித்து, இந்தச் சோதனைக் காலத்தை வெல்வோம்.”

- ஏப்ரல் 9, திருப்பயணிகளான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய செய்தி

வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற, மாட்சிமைக்கு வழிவகுக்கின்ற, அன்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட, ஏமாறாத நம்பிக்கையின் அறிவிப்பாளர்களாக இளையோர் இருக்க வேண்டும்.”

- ஏப்ரல் 12, UNIV பன்னாட்டு இளையோர் மாநாட்டுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி