மியான்மரில் மார்ச் 31 அன்று பேரழிவு தரும் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,644 பேர் உயிரிழந்தனர்; 3,408 பேர் காயமடைந்தனர்; 130 பேர் காணாமல் போயுள்ளனர். 6.3 மில்லியன் குழந்தைகள் உள்பட 20 மில்லியன் மக்கள் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர். அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனச் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகள் உணவு, மருந்து, உறைவிடம் போன்ற தேவைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியா, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரம் நீட்ட உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.