“கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராகவும் பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 88-வது அகவையில் 21-04-2025 அன்று வத்திக்கான் நகரில் மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கம் மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார், துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு, நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடல்களுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத்தந்தன. அன்னாரது மறைவினால் அவரை இழந்து துயருற்றிருக்கும் வத்திக்கான் கத்தோலிக்கத் திரு அவைக்கும், உலகெங்கும் வாழும் கத்தோலிக்கக் கிறித்தவ மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.”
- தமிழ்நாடு சட்டமன்றம்