ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர் பகுதியில் 26 பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற பதற்ற நிலைகளும் இராணுவத் தாக்குதல்களும் தற்போது இடைக்காலப் போர் நிறுத்தத்தால் அமைதி அடைந்துவரும் நிலையில், நிரந்தர அமைதிக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார் மும்பையின் முன்னாள் பேராயர் கர்தினால் கிரேசியாஸ். “இந்தியாவும்-பாகிஸ்தானும் ஒரே கலாச்சாரத்தையும் பாரம்பரியங்களையும் எண்ணப்போக்குகளையும் உணர்வுகளையும் பொதுவாகக் கொண்டிருப்பதால், நேரடியாக உட்கார்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது இரு நாடுகளுக்கும் இலகுவாக இருக்கும்” என்றார் அவர்.