அண்மையில் இஸ்தான்புல் தொழில் பல்கலைக்கழக விஞ்ஞானி செம்ரா ஓர்கான் என்பவர் ‘ஏ.ஐ.’-யை அணுகுண்டுவிற்கு ஒப்பானது என்றும், எப்படி அணுகுண்டு அழிவிற்குக் காரணமாயிருக்கிறதோ, அதேபோன்று கடந்த காலத்தில் நன்மை பயக்கும் அணு விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் தூண்டுகோலாயிருந்தது. அதேபோன்று, வருங்காலத்தில், ஆக்கத்திற்கும் அழிவிற்கும் ‘ஏ.ஐ.’ காரணமாய் அமையலாமென்றும் கூறுகிறார். இவர் கணித்ததுபோன்று இன்று உலகம், மின் தட்டுப்பாட்டைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதை ஈடுகட்ட அணு மின்சக்தியை நாடும் நிலை உருவாகியுள்ளது.
காயா
என்ற விஞ்ஞானி கூறுகிறதாவது: ‘ஏ.ஐ.’-யின்
தொழில்நுட்பம் சுகாதாரம், கல்வி, நீதி போன்ற துறைகளில் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் ‘ஏ.ஐ.’ மூலம்
வேலைப் பளு குறையும்; அதேபோன்று மருத்துவத்துறையில் புற்றுநோய் அல்லது இல்லாத (non tumorous) செல்களைத் துல்லியமாக ஆயந்தறியவும் உதவும். ஆனால், எவ்வளவு நன்மைகளிருந்தாலும், ஆயுதப் போட்டிக்கு இது காரணமாகிவிடும் என்று கூறுகிறார்.
போகும்
வேகத்தில் ‘ஏ.ஐ.’-க்கு
ஓர் ஆணையிட்டால் அதனை அப்படியே (blind folded) நடைமுறைப்படுத்தும் திறன் கொண்ட
தொழில்நுட்பங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ‘ஏ.ஐ.’ தன்னிச்சையாக
இயங்குவதால் அது எந்த வகையில் மனித வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் என்று ஆராய வேண்டுமென்கிறார். ஒரு பக்கம், வேலை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும், இச்சூழல் குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது அடுத்த பத்து ஆண்டுகளைப் பொருத்திருக்கிறது என்கிறார்.
‘நசீம் கெமல் உரெ’ என்ற விஞ்ஞானி தானியங்கி மூலம் ஓட்டுநரில்லாத வண்டிகள் (driverless vehicles) பல விரைவில் நடைமுறைக்கு
வரவிருக்கின்றன; அதன் விளைவுகளை நாம் எதிர்கொள்ளவும் ‘ஏ.ஐ.’ அல்கோரிதம்
அடிப்படையில் (possiblilties) இயங்குவதால், எதிர்பாரா விளைவுகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.
மனிதனுக்கு இணையான
ஏ.ஐ.
(human level ai)
மனிதனுக்கு
இணையான ‘ஏ.ஐ.’ என்பது
ஓர் இயந்திரம் அல்லது பல இயந்திரங்களின் கட்டமைப்பு
(networks of machines) செய்யும் திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதர் செய்யும் வேலைகளைக் கற்பதோடு, அவற்றைச் செய்யும் திறனையும் பெற்று, இலக்குகளை ஏற்படுத்தி அதனை அடைய முனைவது. உதாரணமாக, மொழிபெயர்ப்பாளர், மருத்துவர், விளக்குபவர்/விரிவுரையாளர், ஆசிரியர், சிகிச்சையாளர், வாகன ஓட்டுநர், முதலீட்டாளர் என்ற பணிகளை ‘ஏ.ஐ.’ செய்தல்.
மற்றொன்று,
இன்றுள்ள அனைத்துத் தொழில்நுட்பத் தளங்களையும் இணைத்து (technology of wireless networking to connect the device) பயன்பாட்டினால் மாபெரும் தகவல் களஞ்சியம் (IOT (Internet Of Things) என்ற
தளமாக உருவெடுத்திருப்பது. இதன் வாயிலாக, எவ்வாறு பெருங்கடல் ஒரு திமிங்கலத்திற்கு விளையாட மகிழ்ச்சி தருகிறதோ அதேபோன்று, ‘ஏ.ஐ.’ கையாள்வதற்கு
எண்ணற்றத் தரவுகள் கிடைக்கும்; அதன்மூலம் சமுதாயம் அடையும் நன்மைகள் ஏராளம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், முடிவெடுப்பவர் ஞானமுள்ளவராகவோ அல்லது கனிவானவராகவோ இருக்கலாம்.
கேடுண்டாக்கும் செய்தி கேடான முடிவுகளை எடுக்க உடந்தையாய் இருக்கிறது என்பது நம் அனுபவம்.
இதற்குப்
பல உதாரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவ்வளவு ஏராளமான தரவுகளிலிருந்தும் உலக வெப்பமயமாதலுக்குக் காரணமான கரியமில வாயு தொடர்ந்து வெளிப்படுத்துவதைத் தவிர்க்க ஏன் தீவிரம் காட்ட முடியவில்லை? அமெரிக்க முதலீட்டாளர் Marc Andreessen தன்னுடைய ‘6.6.23’ கட்டுரையில ‘ஏ.ஐ. மனித இனத்தின்
அனைத்துத் தேவைகளையும் தீர்த்துவிடும்’ என்றும்,
‘ஏ.ஐ.’ உலகை அழிக்காது; ஆனால், காப்பாற்றும்’ என்றும்
கூறுகிறார்.
உலகின்
புகழ்பெற்ற தத்துவ ஞானிகளும், ‘ஏ.ஐ.’ வல்லுநர்களும்
(Yoshua Bengal, Geoffrey Hinton, Sam Altman, Elon musk, Mustsfa
Suleyman) AI மனித
நாகரிகத்தை அழித்துவிடலாம் என்கின்றனர். சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ‘ஏ.ஐ.’ தெரிந்தோ
தெரியாமலோ மனித சமுதாயத்திற்குத் தீங்கு இழைக்கலாம் என்று (Bletchley declaration on AI) ஒரு
சாசனத்தில் கையெழுத்தும் இட்டுள்ளனர்.
மனிதர்களில்,
பேராசையும் கொடூரக்குணமும் அதிகாரத்தின் மீது மோகமும் கொண்ட சிலர் எப்போதும் இருக்கிறார்கள் என்பது வரலாறு. 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லரைத் தலைவராகப் பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஏன்? அவர்கள் மனநோயாளிகள் என்பதனாலா? மனிதனின் மனப்போக்கு தனிப்பட்ட மனநிலையினால் அல்ல; கூட்டமாகச் செயல்படுவதனால் அல்லவா!
ஏற்கெனவே
நாம் வாழும் உலகை வெப்பமயமாக்கிவிட்டோம். இன்றிருக்கும் ‘ட்ரோன்ஸ்’,
சேட்போட் மற்ற அல்கோரிதம் செயலாற்றல்கள் ஒருநாள் மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக்கொண்டு, ஏன் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தாது?
இன்று
சீனாவும் அமெரிக்காவும் ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பப்
போட்டியில் முதன்மையிலிருந்தாலும், ஐரோப்பா, இந்தியா, பிரேசில், இரஷ்யா என்று பல நாடுகள் தங்களுக்கென்று
தனி டிஜிட்டல் உலகை உருவாக்கி வருகின்றன. இது ஒருவகையில் இரண்டு துருவங்களைக் கொண்டிருக்காமல், பன்முனை சாம்ராஜ்ஜியங்களுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
ஐம்பது
ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா-இரஷ்யாவிற்குமிடையே பனிப்போர் இருந்தும் எதிர்பார்த்தவாறு அணு ஆயுதப் போர் வெடிக்கவில்லை; ஏனெனில், ஒருவேளை போர் மூண்டால் இரு தரப்பும் அழிவதை இரு தரப்பாரும் அறிந்திருந்தனர். இப்போதுள்ள நிலை, தமிழ் பழமொழி கூறுவதுபோல் ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்ற
நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் குழப்பச் சூழலில், ‘யார் பலிகடாக்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்?’
என்ற நிச்சயமற்ற எதிர்காலம் வரும் சந்ததியினருக்குக் காத்திருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.
இன்றைய
சைபர் போர்ச்சூழலில், தாக்குதலுக்கு எது இலக்காகப் போகிறது என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. யார் தாக்குதலைத் தொடங்கினார்கள் என்றும் தெரியாது. ஒருவேளை வலிமையான நாடு தன் ஆயுதங்களை இயக்கினால், அவை அவர்களின் ஆணைக்குக் கட்டுப்படுமா? என்ற கேள்வியும் உள்ளது. வலிமையான போர் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கிறோம் என்று எண்ணும் நாடு, அதில் தோல்வி அடையும் நிலையும் உருவாகலாம்.
உலகில்
இன்று முக்கிய முடிவுகளை இயந்திரங்களிடம் ஒப்படைப்பதென்பது, ஒருநாள் இப்புதிய தொழில்நுட்பத்திற்கு அடிப்படையான நாம் ‘மனிதர்’ என்பதை இல்லாமல் ஆக்கிவிடுமோ என்ற அச்சம் பலர் மனத்தில் எழுந்தாலும், ‘ஏ.ஐ.’ நம்
வாழ்க்கை முறையை வசதியாய் அமைக்கும் கருவியாய் இருக்கிறதென்பதை மறுக்க இயலாது.
மனித
வாழ்க்கைத் தத்துவத்தில் நுண்ணறிவு என்பது ஒட்டுமொத்த நிறைவை வெளிப்படுத்துவதல்ல; பிழைகள் என்பது மனித வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றிவிட்ட நிகழ்வு. இவை அடுத்து நாம் சரியான முடிவுகளை எடுக்கவும், திருத்தி அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன. ‘ஏ.ஐ.’ தொழில்நுட்பத்தில்
மனிதக் கோட்பாடுகளை அடித்தளமாய் அமைப்பதென்பது ஒழுக்கத்திற்கான தேவை என்பதைவிட, சமுதாய மேம்பாட்டிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இன்றிமையாததாக உள்ளது என்றே உணரப்படுகிறது.
இதற்கான
பொறுப்பு ‘ஏ.ஐ.’-யை
உருவாக்குபவர்களிடம் என்றில்லை. இதன் பங்காளிகளான அரசு, வணிகம், பொதுத்துறை நிறுவனங்கள், தனிமனிதர் என்று அனைவருக்கும் உள்ளது.
‘ஏ.ஐ.’ சமுதாயத்திற்கு
ஒரு சக்தி வாய்ந்த கருவியாக அமைய வேண்டுமென்றால், இத்தொழில்நுட்பம் மனிதத்துவத்தோடு ஒன்றியிருப்பதற்கு நாம் அளிக்கும் பங்கில் அனைவரும் விழிப்புடன் இருப்பதைப் பொருத்தே உள்ளதென்பது பொதுவான கருத்து.