“ஒவ்வொரு துறையிலும் பா.ச.க. வலிமையானதாக இருக்கிறது. பா.ச.க.வை அரசியல் கட்சி என்பதைவிட, ஓர் இயந்திரம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். பா.ச.க. ஓர் இயந்திரம்; அதைப் பின்னால் இருந்து வேறு ஓர் இயந்திரம் இயக்குகின்றது. இரண்டு இயந்திரங்களும் சேர்ந்து தேர்தல் ஆணையம் முதல் நாட்டின் கடைக்கோடியில் உள்ள காவல் நிலையம்வரை அனைத்து இயந்திரங்களையும் கட்டுப்படுத்துகின்றன. வலிமையான இயந்திரத்தை அனைத்து முனைகளிலிருந்தும் நாம் எதிர்கொள்ள வேண்டும். 2029, நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வலுவான சனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் சரிசெய்ய முடியாத இடத்திற்குச் சென்றுவிடுவோம். அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாகும்.”
உயர்திரு. ப.
சிதம்பரம்,
காங்கிரஸ்
மூத்த
தலைவர்
“ஆப்ரேஷன் சிந்தூர்’
இராணுவ நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது. நமது இராணுவ நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்ததால், இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கை என்ன? என்று நான் மீண்டும் கேட்கிறேன். இது ஒரு குறைபாடு அல்ல; இது ஒரு குற்றம். இந்த விவகாரத்தில் உண்மையை அறிந்துகொள்ள இந்த நாட்டுக்கு உரிமை உள்ளது.”
- உயர்திரு. இராகுல் காந்தி,
காங்கிரஸ் எம்.பி.
எதிர்க்கட்சித்
தலைவர்
“இலங்கையில்
இனப்படுகொலை நடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே ஈழத்தமிழர் இனப்படுகொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித
உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இனப்படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத்தருவது இந்தியாவால் மட்டும்தான் சாத்தியமாகும். அதற்காக மத்திய அரசுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து, ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.”
- உயர்திரு. அன்புமணி இராமதாஸ்,
பா.ம.க.
தலைவர்