எம் திருத்தந்தையே
உம்
பெயர்தான் புரட்சியா?
புரட்சிதான்
பிரான்சிசா
திருத்தந்தை பிரான்சிசா!
திரு
அவை பீடத்தில்
ஆட்சி
மன்றத்தில்
புதுமை
புகுத்தினாய்
புரட்சி செய்தாய்!
பெண்
இனமும்
தலைமையேற்க
பார்
போற்ற
வியக்க வைத்தாய்!
பொது
நிலையினரை
அரவணைத்தாய்
ஆட்சி
மன்றத்தில்
அமர வைத்தாய்!
உன்
முகம் காண
நேரிலே
காண
ஒருமுறை
காண
காத்திருந்தோமே!
கண்டம்
விட்டு
கண்டம்
பறந்தாய்!
இந்தியத்
துணைக்கண்டம்
ஏன்
மறந்தாய்?
போர்
நிறுத்தம்
உன் உயிர்
மூச்சு
காசாவில்
போர்
நின்றது உன் மூச்சு!
உக்ரைன்
போர்
நிறுத்திடத்
துடித்தாய்!
நிறுத்திடும்
முன்னே
உன்
துடிப்பை நிறுத்தினாய்!
யூபிலி
ஆண்டு
தொடங்கி
வைத்தாய்!
முடித்து
வைக்குமுன்
ஏன் சென்றாய்?
அறியவில்லை நாங்கள்
உயிர்ப்புப்
பெருவிழாவன்று
மரணப் படுக்கையிலிருந்து
எழுந்து
வருவாயென்று!
அறிவோம்
நாங்கள்
உயிர்ப்புப்
பெருவிழா
அடுத்து
வருவது
விண்ணேற்புப் பெருவிழா!
அறியவில்லையே
நாங்கள்
உயிர்ப்புப்
பெருவிழாவன்று
எம்மிடையே
வந்த நீ
உடன் விண்ணகம் செல்வாயென!
உனது
எளிமையை
இனி
எங்குத் தேடுவோம்?
உன்
சிரித்த முகத்தை
இனி
என்று காண்போம்?
எழுந்து
வா எந்தையே!
சிறிது
காலம் மட்டும்
இருந்து
போ
எம்மிடையே
எம்
திருத்தந்தையே!