“கடவுள் நம்மை அன்பு செய்கின்றார், நம் அனைவரையும் அன்பு செய்கின்றார். தீமை வெற்றிபெறாது! நாம் அனைவரும் கடவுளின் கைகளில் இருக்கிறோம்.”
- மே 8, திருத்தந்தையின்
முதல்
‘ஊர்பி எத்
ஓர்பி’ (Urbi et
Orbi) செய்தி
“கடவுள்
அன்பின் மிக அழகான வெளிப்பாடுகளில் ஒன்று அன்னையர்; அவர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் மீது அளவற்ற அன்பினைப் பொழிபவர்கள்.”
- மே 11, நல்லாயன் ஞாயிறு
மறையுரை
“உறவின்
பாலங்களைக் கட்டுவது என்பது தீர்ப்பளிக்காமல் இருப்பது, செவிசாய்ப்பது மற்றும் கதவுகளை மூடாமல் இருப்பது.”
- மே 11, நல்லாயன் ஞாயிறு
மறையுரை
“உண்மையான,
நீதியான, நீடித்த அமைதி விரைவில் தேவை. போர் இனி ஒருபோதும் வேண்டாம்.”
- மே 11, ஞாயிறு மூவேளைச்
செபவுரை
“அளப்பரிய
ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை
மனிதகுல
நன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும்.”
- மே 12, உலகச் சமூகத்
தொடர்புத்
துறையினருக்கு
ஆற்றிய
உரை