news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.06.2025)

அமைதி என்பது போர் அற்ற நிலை என்பதல்ல; மாறாக, மனித மனங்களின் தாழ்ச்சியிலும், உரையாடலில் கவனமும், தற்பெருமை மற்றும் பழிவாங்கலை மறுத்தலும் ஆகும்.”

- மே 16, திருப்பீடத்திற்கான நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு

ஆயுதங்கள் அமைதியாகட்டும்என்று மீண்டும் மீண்டும் சொல்வதில் திரு அவை ஒருபோதும் சோர்வடையாது.”

- மே 14, கீழை வழிபாட்டுமுறை திரு அவையினரோடு சந்திப்பு

நாம் கிறிஸ்துவுக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருக்கின்றோமோ, அவ்வளவுக்கு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.”

- மே 19, பிற தலத்திரு அவைகளின் பிரதிநிதிகளோடு சந்திப்பு

உரையாடல் செய்பவர்களாக, உறவின் பாலங்களைக் கட்டியெழுப்புபவர்களாக நாம் வாழ வேண்டும்.”

- மே 19, பிற தலத்திரு அவைகளின் பிரதிநிதிகளோடு சந்திப்பு

ஒற்றுமையான திரு அவை, ஒன்றிப்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும், நல்லிணக்கம் அடையும் உலகிற்கான புளிக்காரமாகவும் இருக்கும்.”

- மே 18, திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்புத் திருப்பலி