ஊட்டி மறைமாவட்டம், கூடலூர் பங்கைச் சார்ந்தவர் அருள்பணியாளர் ஜேக்கப் குரு சங்கர். இவர் தனது மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பைக் கோயம்புத்தூரில் உள்ள நல்லாயன் குருமடத்தில் பயின்றவர். 2021, மே 11-ஆம் நாள் ஊட்டி மறைமாவட்டத்திற்காக அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர். புனித சூசையப்பர் ஆலயம்-வெலிங்டன், புனித சூசையப்பர் ஆலயம்-ஆழ்வார்பேட்டை, புனித அந்தோணியார் திருத்தலம்-குன்னூர் ஆகிய மூன்று பங்குகளில் உதவிப் பங்குத்தந்தையாகத் திறம்படப் பணியாற்றியுள்ளார். சிறந்த சிந்தனையாளர்; மறையுரையாளர். ‘வழிகாட்டும் அருள் ஒளி’ இதழில் பல கட்டுரைகளை இவர் படைத்துள்ளார்.
அருள்பணியாளர்
பிரின்ஸ் கன்னியாகுமரி மாவட்டம், வர்த்தான்விளை பங்கைச் சார்ந்தவர். இவர் அமலமரி தூதுவர் சபையைச் சார்ந்த அருள்பணியாளர். தன்னுடைய மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பை அருள்வனம் குருமடம், மதுரமங்கலம் மற்றும் பழஞ்சூர், MMI இறையியல்
கல்லூரியில் பயின்ற
இவர், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்.
புனித யோசேப்பு பல்கலைக்கழகம், நாகலாந்தில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டப் படிப்பு (MSW) பயின்றவர்.
இவர் முட்டம் கே.எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் ஓராண்டும், பழஞ்சூர், புனித யோசேப்பு பல்கலைக்கழகத்தில் ஓராண்டும் பணியாற்றியுள்ளார். பல கத்தோலிக்க இதழ்களில்
பல கட்டுரைகளை எழுதி வருகிறார்.
இவ்விரு
அருள்பணியாளர்களும் நம் வாழ்வின் துணை ஆசிரியர்களாகப் பணியாற்ற முன்வந்துள்ளனர். இருவரையும் ‘நம் வாழ்வு’ மகிழ்வோடு வரவேற்கிறது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்கு இவர்களை மனமுவந்து அளித்துள்ள உதகை மறைமாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்களுக்கும், அமலமரி ஊழியர் சபையின் நிறுவுநர் அருள்முனைவர் E. அருள்ராஜ்
அவர்களுக்கும், சபைத்தலைவர் அருள்பணி. வில்லியம் MMI அவர்களுக்கும்
மற்றும் சென்னை மாகாணத் தலைவர் அருள்பணி. ஆன்றனி ஜெரால்டு MMI அவர்களுக்கும்
உளங்கனிந்த நன்றியை ‘நம் வாழ்வு’ தெரிவித்துக்கொள்கிறது.