news-details
சிறப்புக்கட்டுரை
இளமையெனும் பூங்காற்று...

உலகின் 19% இளைஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 60 கோடி என்கிறது புள்ளி விவரங்கள். இவர்களில் 20% பேர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பங்கு பெறுகிறார்கள். உலகளாவிய போட்டிக்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் அளவு பற்றாக்குறையால் தேச வளர்ச்சி முடங்கிக் கிடக்கிறது. மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (.எல்..) தருகிற அறிக்கைப்படி, பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 37% குறைந்துள்ளது.

நவீன காலத்திலோ பதின் பருவ மாற்ற நிலையிலேயே இளமையின் சவால்கள் அளப்பரியது. அது உடல், உள்ளம் சார்ந்த அகப்பிரச்சினைகளோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்தல், அதில் மீள முடியாமையால் தவித்து நிற்பது; தரமானக் கல்வி, தேர்ச்சி, நல்ல மதிப்பெண்கள்; விரும்பிப் படிக்க உயர்கல்வி என நீள்கிறது. வேலைவாய்ப்பு, வளாக நேர்காணல் என விடை தெரியாத கேள்விகள் மேலும் விரிகிறது. இது தவிர தொலைக்காட்சி, மின்னணு ஊடகங்கள் என்ற திசை திருப்புதல்களும், போதைப்பழக்கம் என்ற பின்னடைவுகளைக் கொண்ட தடைகளைத் தாண்ட வேண்டும். நமது பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, நடுத்தர பிற்படுத்தப்பட்ட இளையோரின் தேடல் எல்லைக்குள் அடங்கி விடுகின்றது. ..டி. மற்றும் .பி.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட 3% மேற்குடி மக்களுக்கானது. மீறி சேரும் இதர பிரிவு மாணவர்கள், அவர்கள் தரும் அழுத்தம் மற்றும் பிற்போக்குப் பார்வையால் இடைநிறுத்தம் செய்கிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி ஒன்றிய பா...வின் பத்து ஆண்டு ஆட்சிக்காலத்தில், இடை நிறுத்தம் செய்த 25,539 மாணவர்கள் மற்றும் 135 தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் விவரத்தைத் தாக்கல் செய்ய  உச்ச நீதிமன்ற அமர்வு, அரசிற்கு  உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான .பி.வி.பி., அங்கு உயர்சாதி அரசியல் செய்கிறது. அதுபோலவே, அங்குள்ள ஆசிரியர்களும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைக் கல்வி கற்கக்கூடாது என மனுதர்ம அரசியல் செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு மூன்று தலைமுறைகளாகப் பெற்றுள்ள கல்விச் செல்வ விழிப்புணர்வு, புதிய திசைகளை அடையாளம் காண்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டு இளைஞர்கள் இயல்பிலேயே புத்திசாலிகள். இருமொழிக் கொள்கையால் ஆங்கிலத்தில் அசத்துபவர்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தரும் சான்று இதோ: “தமிழ்நாட்டிலிருந்து பலர் அமெரிக்க நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்றுச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.”

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் உயர் பதவிகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். ..எஸ். தேர்வுகளுக்குப் பயிற்சி எடுக்க வருபவர்களில் அதிகம் பேர் தமிழர்கள்தாம். பொதுவாக ..எஸ்., .பி.எஸ். என்றால் அது தமிழ்நாடு என்ற நிலை இருக்கும். தற்போது அவர்கள் சாதிக்க உலகம் முழுவதும் பயணிக்கிறார்கள். தமிழர்கள் ஆங்கிலம் கற்றுச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால், அனைவருக்கும் தாய்மொழி அறிவும், ஆங்கில அறிவும் சமவாய்ப்பாக அமைவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் உள்பட, பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் விடுப்பு விண்ணப்பங்களில், விடுப்பிற்கான காரணங்களை ஆங்கிலத்தில் எழுதத் திணறுகிறார்கள். இது வருத்தத்திற்குரியது. மதிப்பெண்ணை மட்டும் அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையின் கோளாறு இது. வாசிப்புப் பழக்கம், கடிதங்கள் எழுதும் பழக்கம் இல்லாததே  இதற்கு அடிப்படைக் காரணி.

இன்று வாட்ஸ்-ஆப் குறுஞ்செய்தியைக் கூட எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க, உச்சரிப்பு வார்த்தைகளில் எழுத்துகளைச்  சுருக்கும் முறையும் புது  மொழி வடிவாக இருக்கிறது. மொழிக் கல்வியை மதிப்பெண் என்ற வட்டத்தில் அடக்கியது மூலப் பிழையாகும். தாய்மொழிக் கல்வி  என்பது அரசுகளின் கடமைக்குள் முன்னுரிமை பெறுவதாகும். அது புதிய தலைமுறைகளை உரு தருவதாகும்.

காரல் மார்க்ஸ் கூறுகிறார்: “ஒரு தாயின் கவனிப்பு இல்லாமல், அவர்கள் வாழக்கூடிய தருணத்திலிருந்து, அனைத்துக் குழுந்தைகளின் கல்வியும் அரசு நிறுவனங்களில் இருக்க வேண்டும்.” ஆனால், இங்கு எவருக்கும் உண்மையான, சமச்சீரான கல்வி தரப்படுவதில்லை. இராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து சாதித்த அப்துல் கலாம் போல அனைவருக்கும் ஏற்ற சமமான வாய்ப்புகள் எளிதாகக் கனிவதில்லை.

வேலைவாய்ப்பிற்குப் பின், நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, .எம்.. போதையில் விழுகின்றனர். ‘கையிலே வாங்கினேன், பையிலே போட்டேன், காசுபோன இடம் தெரியலைஎன்ற பாடலே இன்றைய இளைய சமுதாயத்திற்குப் பொருந்திப் போகிறது. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் என்ற கடந்த தலைமுறையின் நுகர்வுக் கலாச்சாரக் கொண்டாட்டங்கள் மாறிவிட்டன. புது நாகரிகத்தைப் பிரதிபலிக்கிற ஷாப்பிங் மால் கலாச்சாரம் தறிக்கெட்டுக் கிடக்கிறது. புதியவீக் எண்ட்திருவிழாக்கள், போதையின் பாதையில் வசந்தத் தென்றலாய் வீசுகிறது.

வாழ்வாதாரப் பணி தவிர, இன்றைய இளைஞர்கள் இரசிகர் மன்றங்களிலும், கிரிக்கெட் பந்தயங்களிலும் தொலைந்து கிடக்கின்றார்கள். சிறு கிராமங்களில் கூட தனக்குப் பிடித்த நடிகனுக்குக் கட்-அவுட் வைப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள். அதில் அளவு ரீதியாகஎன் தலைவனுக்குதான் பெரிதுஎனக் கட்-அவுட், பிளக்ஸ் என்ற போட்டிகள் தனி இரகம். என் நண்பர் கூறுகிறார்... ‘எத்தனை அம்மாக்களின் சிறுவாட்டுச் சில்லறைச் சேமிப்புக்கு, இந்த இரசிகர்கள் கட்-அவுட் வைத்து, வேட்டு வைத்தனரோ?’

தலைமுறைகள் மாற மாற சமூக-அரசியல் விழிப்புணர்வுகள் குறைந்துகொண்டே வருகின்றன. வாட்ஸ்-ஆப்பில், யூடியூப்பில் வரும் வதந்திகளை உண்மை என நம்புகிறார்கள். போதிய சமூக, அரசியல் வரலாறு தெரிந்திருப்பதில்லை. சம கால அரசியல் குறித்த விழிப்புணர்வு இல்லை. தனி மனித ஆராதனை அதிகமாகி விட்டது. ஓர் அரசியல் கட்சியின் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களின் கேள்விகள், வாட்ஸ்-ஆப் குறித்தே அதிகமாக இருந்தன.

கீழ்மட்டத் தொண்டர்கள் கொள்கை, சமூகப் பார்வை கொண்டவர்களாக, பொதுநலன் சார்ந்த, சுயநலமற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். வளர்ந்து வரும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சுயநலத்தோடு, அரசியலைப் பணமாக்கும் தொழிலாகப் பார்க்கிறார்கள். இது நாளைய நாள்களில் தேசம் சந்திக்கிற பெரும் சவாலாகும்.

இன்றைய இளைஞர்களைச் சமூக-அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்ற கல்வி முறையில் மாற்றம் வேண்டும். தேசம் காக்கிற அர்ப்பணிப்புக் கல்வியைப் பிள்ளைப் பருவத்திலேயே புகட்டுதல் காலத்தின் கட்டாயமாகும்.

இயற்கை வளங்களோ, மனித வளங்களோ இல்லாத ஐரோப்பிய நாடுகள், நவீனமய தொழில்நுட்ப அறிவால் ஆற்றல் பெறுகின்றன. நமது கல்வி முறை, புதிய கண்டுபிடிப்புகளுக்குப் புதிய கருத்தாக்கங்களுக்கு உட்பட்டதாக இல்லை. உலகளாவியச் சவால்களைத் தாக்குப் பிடிப்பதில்லை. நமது பாடத்திட்டங்கள் ஒன்றிய பா..அரசால் பழைய பஞ்சாங்கமாக மாற்றப்படுவது கவலை தருவதாகும்.

தேசத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கொண்டு வரப்படுகிற காலத்திற்கேற்ற நவீன மாற்றங்களே தேசமெனும் தோட்டத்தில் இளமையெனும் பூங்காற்று வீச அடிப்படை வீச்சாக அமையும்.