தமிழ்நாடு ஆயர் பேரவையின் தனிப்பெரும் வார இதழான ‘நம் வாழ்வு’ இதழின் துணை ஆசிரியராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாய்ப் பணியாற்றிய அருள்பணி. அருண் பிரசாத் அவர்கள், தற்போது பணி மாறுதலாகித் தன் சொந்த மறைமாவட்டப் பங்குப் பணிக்குச் செல்கிறார். அருள்பணி. அருண் பிரசாத் அவர்கள் ‘நம் வாழ்வு’ இதழில் திருத்தந்தையின் முழக்கம், வத்திக்கான் திரு அவைச் செய்திகள், ‘சிந்தனைச் சிதறல்கள்’ எனத் தனது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கி வாசகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றவர். ‘கல்விச் சுரங்கம்’ எனும் மாணவர் மாத இதழில் ‘அறிவியல் அறிவோம்’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கு அறிவியல் தகவல்களைக் கொடுத்தவர். அண்மையில் திருச்சியில் ‘நம் வாழ்வு - வாசகர் வட்டம்’ நிகழ்வைத் திறம்பட நடத்தியவர். இவரை இப்பணிக்காக அளித்த திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு. முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கும், மறைமாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் சார்பாகவும் ‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வாசகர்கள், சந்தாதாரர்கள், அலுவலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இறையருள் எந்நாளும் இவருக்குத் துணையிருக்க ‘நம் வாழ்வு’ வாழ்த்தி வழியனுப்புகிறது.
- முதன்மை ஆசிரியர்