news-details
இந்திய செய்திகள்
திருத்தந்தையின் பணியேற்பு விழாவில் மாநிலங்களவையின் துணைத் தலைவர்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்புத் திருப்பலியில் இந்தியாவின் பிரதிநிதியாக மாநிலங்களவையின் துணைத் தலைவர் திருமிகு. ஹரிவன்ஸ் சிங் மற்றும் நாகலாந்து மாநிலத்தின் துணை முதலமைச்சர் யாந்துங்கோ பேட்டர்ன் ஆகியோர் பங்கெடுத்து இந்திய மக்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பணியேற்புத் திருப்பலிக்குப் பிறகு திருத்தந்தையைச் சந்தித்த திருமிகு. ஹரிவன்ஸ் சிங், திருத்தந்தையின் ஆன்மிகத் தலைமைக்கு இறையாற்றலும் ஞானமும் கிடைக்க உளமார்ந்த வாழ்த்துகளையும் இறைவேண்டலையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் சமயங்களிடையிலான ஒற்றுமை குறித்த திருத்தந்தையின் செய்தியை வெகுவாகப் பாராட்டினார்.