திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இந்தியாவின் கேரளா மாநிலம் சீரோ- மலங்கரா மாவேலிக்கரா மறைமாவட்டத்திற்கு, மேத்யூஸ் போலிக்ராப்ஸ் அவர்களைப் புதிய ஆயராக நியமித்துள்ளார். ஆயர் மேத்யூஸ் போலிக்ராப்ஸ் அவர்கள் 1955-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி மணக்காரகாவில் பிறந்தவர். இவர் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டவர். 2022, மே 15 அன்று ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர் திருவனந்தபுரம் துணை ஆயராகவும் பணியாற்றியுள்ளார்.