news-details
சிறப்புக்கட்டுரை
வானிலையும் காலநிலையும் (உலகம் உன் கையில்! – 05)

நாம் வெளியில் செல்வதென்றால் வானிலையை அறிந்துகொண்டு செல்வது இயல்பு. இப்போது காலநிலை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்த இரண்டிற்கும் என்ன வேறுபாடென்ற குழப்பமும் நம்மில் நிலவுகிறது.

வானிலை என்பது ஒரு நேரத்தில், நாளில், ஓரிடத்தில் நிலவும் இயற்கைச் சூழல். இது வெப்ப நிலை, மேகமூட்டம், வறட்சி, சூரிய ஒளி, காற்று, மழை, பனி இவற்றின் அளவினைக் குறிக்கிறது. சில இடங்களில் நிமிடத்திற்கு நிமிடம், மணிக்கு மணி, வானிலை மாறுபடுவதைக் காண்கிறோம். வானிலை மாற்றத்தை அடிக்கடி அறியலாம். வானிலையைக் கணித்து வானிலை மையம் முன்னறிவிக்கிறது. தனியார் வானிலை இயக்கங்களும் செயல்படுகின்றன. சில நேரங்களில் வெப்ப நிலையின் அளவைஇன்று வெப்பம் உச்சமாக இருக்கிறதுஎன்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். இது வானிலைப் பதிவுகளைக் குறித்துச் சொல்லப்படுவது. ஏனென்றால், வானிலை மாற்றத்தைக் கணிப்பதற்கு முந்தைய வானிலை அளவுகளை அறிந்திருக்க வேண்டும்.

இன்றளவில் வானிலை முன்கணிப்பு மக்கள் உயிர்ச்சேதம், பொருளிழப்புகளைத் தவிர்க்கவும், வணிகச் செயல்பாடுகளை ஒழுங்குசெய்யவும், பிரயாணங்களை உறுதிப்படுத்தவும் தேவையானதாக அமைந்து விட்டது. இந்நாள்களில் இயல்பாக ஏற்படும் கணிக்கமுடியாத வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் அதற்கு நாம் தயார்படுத்திக் கொண்டும் வருகிறோம். காலநிலை என்பது நீண்ட இடைவெளியின் அடிப்படையில், ஆராய்ச்சிகள் மூலம் சராசரி வானிலை மாற்றங்களின் அளவைக் குறிப்பதாகும்காலநிலை மாற்றம் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு வடிவில் உருவெடுக்கும் நாள்களில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளில் காலநிலை மாற்றங்கள் இடத்திற்கு இடம் மாறுபட்டும் அதிகரித்தும் வருவதைக் காண்கிறோம்.

காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் நீண்ட இடைவெளியில் நிலவும் சராசரி வானிலை மற்றும் நிகழும் மாற்றத்தையும் குறிக்கிறது. வானிலைக்கும் காலநிலைக்கும் உலக வெப்பமயமாதல் காரணமாயிருந்தாலும், அடிப்படையில் மக்கள்பெருக்கமும் அதன் விளைவாக உருவெடுத்த தேவைகளும் என்பதை மறுக்க முடியாது. உலகளவில் இன்று காலநிலை மாற்றத்தைப் பற்றிய முக்கியத்துவம் அனைத்துத் துறைகளிலும் உணரப்படுகிறது.

வேளாண்துறை, விமானப் போக்குவரத்து, கடல் சார்ந்த மற்றும் கப்பல் போக்குவரத்து, மின்விநியோகம், தரைவழிப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, வேளாண்மை, பங்குச் சந்தை என்று எண்ணற்ற துறைகளில் அன்றாட வாழ்வு முறைக்கும் காலநிலை கணிப்பு அவசியம் என்றாகிவிட்டது.

எரிமலை, பூகம்பம், சுனாமி - வானிலை எரிமலைச் சீற்றம், பூகம்பம், சுனாமி என்பவை பொதுவாக மனிதக் கட்டுப்பாட்டிற்குள் வராத இயற்கைப் பேரழிவுகள் என்றுகூட சொல்லலாம். இவையும் சில வேளைகளில் வானிலை மாற்றத்திற்குக் காரணமாய் அமைந்திருப்பதாக அறியப்படுகிறது.

எரிமலைச் சீற்றத்தின் காரணமாக வரலாற்றில் வானிலை பாதிப்படைந்ததற்கு 1991-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் mount pinatubo வெடித்த எரிமலை நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக இயல்புக்கு மாறாக உலகமெங்கும் குளிர்ந்த நிலை, அதனைத் தொடர்ந்து பல மாற்றங்கள் நிலவியதைக் காணமுடிந்ததாக தரவுகள் உள்ளன.

கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இதேபோன்று காற்றின் அழுத்தத்தினால் பூகம்பம் உண்டானதென்று அறியப்படுகிறது. ‘சுனாமிஎன்பது எதிர்பாராகடல் பொங்குதல்உலகில் பல இடங்களில் உருவாகும் இயற்கைச் சீற்றங்களில் ஒன்று. இவற்றில் பெரும்பாலான சுனாமிகள் கடல் தரைமட்டத்திலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் உருவாகும் பூகம்பங்களால் ஏற்படுவதாகும். எல்லாப் பூகம்பங்களும் சுனாமிக்குக் காரணமாய் அமைவதில்லை. மண்சரிவு, எரிமலை வெடிப்பு, எரிகற்கள், வால் நட்சத்திரப் பாதிப்பு என்ற காரணங்களாலும் உருவாகும் இந்தச் சுனாமியின் பின் காற்றழுத்தமும் பேரலைகளும் உருவாகிறது. இவை அதிவேக காற்றினால் (windstorms) ஏற்படுகிறதென்றும் அறியப்படுகிறது.

காற்றழுத்தமும் வானிலையும் சேர்ந்து சுனாமிக்குக் காரணமாய் அமைவதைமெடோ சுனாமி (meteotsunamis) என்றழைக்கப்படுகிறது. உதாரணமாக, 13.6.2013-இல் வடகிழக்கு அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் இவ்வகை மெடோ சுனாமி ஏற்பட்டது. இவ்வாறு எரிமலை, பூகம்பம், சுனாமி என்பவை திடீரென்று நிகழ்வதும் வானிலை பாதிப்படைவதற்குத் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.

முன்கணிப்பும் .. தொழில்நுட்பமும் (AI forecast)

வரலாற்றில் விஞ்ஞானம் பல துறைகளில் மனிதனோடு துணை நின்றதும் காலத்திற்கேற்ப மாற்றியமைத்து அரணாக இருப்பதையும் அறிவோம். அவற்றில் ஒன்று காலநிலை விஞ்ஞானம் என்பதும், ‘இயற்கையைக் கணிப்பதில் இத்தனை முன்னேற்றமா?’ என்று வியக்கும் நாள்களில் இன்று வாழ்கிறோம். பாரம்பரியமாக நம்பியிருந்த வழிமுறைகளை விட்டு, மிகவும் உயர்தரத் தொழில்நுட்ப உபகரணங்களுடன், அல்கோரித நுட்பமும், செயற்கைக்கோள்கள் இயக்கமும் சேர்ந்து வெளிமண்டலச் சூழலைத் துல்லியமாகக் கணிக்கும் திறன் நடைமுறையில் இன்று இருக்கிறது.

20-ஆம் நூற்றாண்டிலிருந்து கணினியின் மூலம், கணித அடிப்படையில்  வெளிமண்டல மாற்றங்களை ஆய்வது பயன்பாட்டிலிருந்தது. இதில் காலநிலை முன்கணிப்பு முக்கியமான ஒன்று. கடந்த 100 ஆண்டுகளில் உலகில் பல பகுதிகளிலிருந்து பலதரப்பட்ட முக்கிய வானிலைத் தரவுகள் கிடைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ஏராளமான வானிலைத் தரவுகளை, மேம்படுத்தப்பட்ட கணினிகளும்கூட (Super computers) கையாள முடியாத நிலையில், இப்போது விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் வழியாகத் துரிதமாகவும் துல்லியமாகவும் அறியும் முறைகளுக்குத் தகுந்த ஆயுதமாக இருப்பது ..

மனிதர்களின் ஆற்றலுக்கு ஒத்த வேலைகளைச் செய்யவும், சிக்கல்களைத் தீர்க்கவும், சாயல்களைக் கண்டறியவும் கணினியின் மேம்படுத்தப்பட்ட திறனைப்பெற்று .. விளங்குகிறது.

.. தொழில்நுட்பம் என்பது கற்கும் இயந்திரம் மற்றும் இயந்திரச் சிந்தனை என்று இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. .. தொழில்நுட்பம் தரவுகளைக்கொண்டு கற்கும் இயந்திரம் (மெஷின் லர்னிங் ஆடு) - அல்கோரிதம் அடிப்படையில் கற்று, தொடர்ந்து மேம்படுத்தி முன்கணித்துச் செயல்படுத்தவும் மாடல்களை உருவாக்கும் திறன் படைத்தது. மெஷின் லர்னிங்கின் துணைப்பிரிவான இயந்திரச் சிந்தனை செயற்கை நரம்புவலை (artificial neural networks) முறையில் மனித மூளை இயங்குவதைப் போன்று இயந்திரங்கள் தானாகச் சிக்கலான செய்திகளைக் கையாளவும் ஆய்ந்தறியும் ஆற்றல் பெற்ற தொழில்நுட்பம் (எகா: ஓட்டுநரில்லாத மோட்டார் வாகனம்).

..யும் வானிலைத் தரவுகளும்

தரவுகள் ஆய்வின் மூலம் இந்நாள்களில் முன்பு போலில்லாமல், அதிநவீன முறைகளைக்கொண்டு .. உதவியுடன் துல்லியமாகக் காலநிலை முன்கணிக்கப்படுகிறது. செயற்கைக்கோள்கள், ரேடார், சென்சார்ஸ், காலநிலையங்கள் / மையங்கள், கடல் சார்ந்த கருவிகள் (Ocean buoys) வழியாகத் தேவையான காலநிலைத் தரவுகள் கிடைக்கின்றன.

இத்தரவுகளை .. கற்கும் இயந்திரம் (மெஷின் லர்னிங்- ஆடு) ஆய்ந்து புயல் உருவாகுதல், அதன் பாதை முதற்கொண்டு அனைத்துக் காலநிலை மாற்றங்களையும் உடனுக்குடன் கணிக்கும் திறன் பெற்றுள்ளது. வானிலைத் தரவுகளை ஒருங்கிணைத்துப் புதிய காலநிலை மாடல்களைத் துல்லியமாகவும் துரிதமாகவும் உருவாக்க .. பயன்படுகிறது. விமானப் போக்குவரத்து மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப ரேடார், சென்சார்ஸ், செயற்கைக்கோள்கள் மூலம் பெற்றத் தரவுகள் வாயிலாக எச்சரிக்கை செய்திகளைக் கொடுக்கவும் .. உதவுகிறது.

இதுவரை சேகரித்த தரவுகளைக்கொண்டு, நிறுவனங்களுக்குத் தேவையான வானிலை முன்கணிப்பு மற்றும் அறிக்கைகளைத் தயாரித்துக் கொடுப்பது; குறிப்பாக விவசாயம், விமானத்துறை, அரசுக்கு வெள்ள எச்சரிக்கை போன்று பலதரப்பட்ட வானிலை அறிக்கைகளைக் கொடுக்க .. பயன்படுகிறது.

பூகம்பங்கள், சுனாமி, புயல், அடைமழை, வறட்சி என்ற மாறுபட்ட காலநிலையில் வாழும் நமக்குத் துரித வானிலைத் தகவல்கள் தேவையாக உள்ளது. அரசு, நிறுவனங்கள் பயன்பாட்டிற்கும், வானிலை ஆய்வறிக்கைகள் தயாரிக்கவும் செயல்படுத்தவும் மேம்படுத்தவும் ஆராய்ச்சி செய்யவும் எதிர்கால காலநிலைகளை முன்கணிக்கவும் .. பெரிதும் பயன்படுகிறது.