news-details
கவிதை
கவிதைச் சாரல்

களிப்பதுமில்லை!

கண்ணீரில்

நனைவதுமில்லை!

ஆர்ப்பதுமில்லை!

கோர்ப்பதுமில்லை!

அடங்குவதில்லை!

அடக்குவதுமில்லை!

வார்த்தைத் தூரிகைக்

கொண்டு

பரந்து விரிகிறது!

கவிதை வானம்!

 

உரக்கச் சொல்ல

முடியவில்லைதான்!

சில வலிகளையும்!

துடைக்கத் துடைக்கப்

பெருகும் கண்ணீருக்கான

காரணங்களையும்!

ஆனாலும்

உருகிப் போகிறோம்

வாழ்வின் நுட்பங்களில்

இறைவன் நமக்கென்றே

ஒளித்து வைத்திருக்கும்

இரசனைகளை நம்பியவாறே!

 

மௌனமும் நிசப்தமும்

மையம் கொள்ளும்

இடத்தில் எல்லாம்

யாரோ ஒருவரின்

யாரோ ஒருவர் மீதான

நம்பிக்கை

கொல்லப்பட்டிருக்கிறது

என்பதே பொருளாகும்!

 

ஆழ அடி தோண்டிட

வேலையாள் போதும்

அழகாய் வடிவமைக்க

நிபுணர்கள் வேண்டும்!

கல்லை உடைக்க

அடிமைகள் போதும்!

ஆனால்,

சிற்பங்களை

வடிவமைக்க

சிற்பிகள்தான்

வேண்டும்!

அவரவர் தனித்துவமே

கடவுளின் மகத்துவம்!

 

உங்களை

நியாயப்படுத்த

பிறரைக்

காயப்படுத்தாதீர்கள்!