கடந்த ஓர் ஆண்டாக ‘இறைவேண்டலின் பரிமாணங்கள்’ என்னும் தலைப்பில் மன்னிப்பு, பரிவு, அர்ப்பணம், கொடுத்தல், நற்பணி, அமைதி, உடல், மனம், சொல் எனப் பல்வேறு கோணங்களில் தொடர் கட்டுரை வழங்கி ‘நம் வாழ்வு’ வாசகர்கள் பலரின் பாராட்டைப் பெற்ற அருள்முனைவர் குமார் ராஜா அவர்களுக்கு ‘நம் வாழ்வு’ தனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. தந்தை அவர்களின் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுப் புதிய நூலாக வெளிவர உள்ளது. பிரதிகளை விரும்புவோர் ‘நம் வாழ்வு’ தலைமைச் செயலகத்தைத் தொடர்புகொள்ளவும். தந்தை அவர்களின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகிறோம்.
- முதன்மை ஆசிரியர்