news-details
உலக செய்திகள்
நெருக்கடியிலும் நம்பிக்கை தளராத பாகிஸ்தான் கிறித்தவர்கள்!

பாகிஸ்தானில் மிகவும் இறுக்கமான, இழிவான காலச்சூழலில் வாழ்ந்து வருகின்ற கிறித்தவர்கள் பொருளாதாரம், வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் கேள்விகளுக்கு உள்ளாகும் நிலையில் மக்கள் இடம்பெயர்வது கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மே 31 அன்று இஸ்லாமாபாத் - இராவல் பிண்டி மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பாளர் மற்றும் பாகிஸ்தானிலுள்ள திருத்தந்தையின் மறைபரப்புப் பணிகளுக்கான தேசிய இயக்குநர் அருள்தந்தை ஆசிப் ஜான் கோகர், யூபிலி ஆண்டை முன்னிட்டுப் பேசுகையில், திருத்தந்தை 14-ஆம் லியோ நீதி, அமைதி, உண்மை ஆகிய மூன்று வார்த்தைகளை அழுத்தமாகக் கோடிட்டுக்காட்டும் மறையுரைகளை, பாகிஸ்தானிய நம்பிக்கையாளர்கள் வாழ்வாக்குவார்கள். நம்பிக்கையில் தளரா மனத்துடன் முன்னோக்கி, இணைந்த திரு அவையாக அவர்கள் பயணிக்கிறார்கள் என்றும் பதிவுசெய்துள்ளார்.