உலக மழைக்காடுகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்படும் வேளையில் இந்த ஆண்டு மழைக்காடுகளைப் பாதுகாப்பதில் உலகை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலகில் ஆக்ஸிஜன் 20 விழுக்காடும், மருந்துகள் 25 விழுக்காடும் காடுகளிலிருந்து பெறப்படும் நிலையில் காடுகள் எரிந்தும் அழிந்தும் கொண்டிருப்பது மனித வாழ்வாதாரத்திற்குக் கேள்விக்குறியாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.