“பல குடும்பங்கள் தங்கள் சொத்துகளை விற்றுப் பிள்ளைகளைப் படிக்க வைப்பது இங்கே சாதாரண நிகழ்வாகிவிட்டது. பணம் கொடுத்துக் கல்லூரியில் சேர்ப்பதால் ‘நான் எப்போது விழுந்தாலும் பணம் கொடுத்துத் தூக்கி விடுவார்கள்’ என்கிற தவறான எதிர்பார்ப்பைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறோம். எனவே, பணம் கொடுத்துச் சேரவேண்டிய நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டு, எங்கெல்லாம் தகுதியின் அடிப்படையில் சேர முடியுமோ, அங்குப் போட்டியிட்டுச் சேருவதற்கு அரசுக் கல்வி நிறுவனங்கள்தான் ஒரே இடம்.”
- கல்வியாளர் தா.
நெடுஞ்செழியன்
“ஒரு
நாட்டில் வறுமை ஒழிய, வேலையில்லாத் திண்டாட்டம் குறைய உயர்கல்வி மிக மிக அவசியம். ஒரு குடும்பத்தில் ஒருவர் உயர்கல்வி பெற்றாலே, அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக நிச்சயம் வலுப்பெறும் என்பதுதான் உண்மை. ஒரு குடும்பத்துக்கான அதே அளவுகோல்தான் இந்த நாட்டுக்கும் சரி, மாநிலங்களுக்கும் சரி. எனவே, நாம் எந்த அளவுக்கு உயர்கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதைப் பொறுத்துதான் நமது வளர்ச்சி, இலக்கு எல்லாமே.”
- முனைவர் கோ.
விசுவநாதன்,
வேந்தர், வி.ஐ.டி.
பல்கலைக்கழகம்,
வேலூர்
“சிறிய
குடும்பங்களில் பெண்களுக்குப் பெரும் சொத்தாகவும், உடனடியாகப் பணம் பெற அரிய வழியாகவும் இருப்பது தங்க நகைக் கடன்தான். திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணங்கள், அவசர நெருக்கடியான காலங்களில் இது மிகவும் உதவியாக இருக்கிறது. வசதியானவர்கள் வங்கி லாக்கர்களைப் பயன்படுத்தி வந்தாலும், எளியவர்கள் அடமானத்தையே தங்கள் இறுதித் தீர்வாகப் பார்க்கிறார்கள். நகைக்கான அடமான
விதிகளை அதிகரிக்கும்போது வங்கிகளை நாடாமல், அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை மக்கள் அவசரத் தேவைக்காக நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் அதிக வட்டியும், நகைகளைத் திருப்ப முடியாத சூழலும் ஏற்படும்.”
- முனைவர் வைகைச்
செல்வன்,
முன்னாள்
அமைச்சர்