news-details
சிறுகதை
இடைவிடாத மருத்துவப் பணி - காவல் அன்னை (தொடர் கதை – 06)

டாக்டர், அந்தச் செல்வமரிக்கு ஹீமோதெரபி கொடுக்கணும்னு எழுதிவெச்சேன். நம்ம சகாதேவன் டாக்டர் வந்துஅது வேண்டாம், அடையாறுக்கு ரெகமண்ட் பண்ணி அனுப்பிச்சிருங்கன்னு சொல்றார். என்ன செய்யலாம்?” என்று கேட்டாள் யாழினி.

ஏன், நீங்கதானே இங்கே கேன்சர் டாக்டர். அதிலே ஏன் அவர் தலையிடுறார்னு தெரியலையே யாழினிஎன்று கேட்டார் சேவியர்.

அதுதான் எனக்கும் புரியலே! கேன்சர் கட்டி ஆப்பரேஷன் பண்ணி எடுத்தாச்சு. நம்ம இப்ப ஹீமோதெரபி போட்டால்தானே அது சரியாகும். இப்படியே எப்படி அனுப்புறது?” என்று கேட்டாள் யாழினி.

நீங்க டாக்டர் இஸ்மாயில்ட்டே சொல்ல வேண்டியதுதானே யாழினிஎன்றார் சேவியர்.

அது கம்ப்ளெயிண்ட் மாதிரி ஆயிரும். அதுக்குத்தான் நான் யோசிக்கிறேன் டாக்டர்என்றாள் யாழினி.

நீங்க போங்க, நான் சகாதேவனிடம் பேசி விவரம் கேட்டுச் சொல்றேன்என்றார் சேவியர்.

நர்சை அழைத்து, “டாக்டர் சகாதேவனை என் அறைக்கு வரச்சொல்என்றார் சேவியர்.

சிறிது நேரத்தில் சகாதேவன் வந்தார்.

வாங்க டாக்டர், இந்தச் செல்வமரிக்கு ஹீமோதெரபி வேண்டாம்னு சொன்னீங்களாமே, அது எதுக்காகன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டார் சேவியர்.

சேவியர், என் படிப்பும் அனுபவமும் உங்களை விட நீண்டது. அதைவிட இங்கே நான் ஆரம்பத்திலிருந்து இருக்கேன். இதிலே என்னை நீங்க கிராஸ் பண்றது முறையற்ற செயல். பேசண்டுக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்என்றார் டாக்டர் சகாதேவன்.

அப்படிச் சொல்றீங்களா! கேன்சர் டாக்டர் யாழினிதான் சொல்லிருக்காங்க, அதிலே நீங்க எப்படி கிராஸ் செக் பண்ண முடியும்?” என்றார் சேவியர்.

நான் எல்லாவற்றையும் கவனிப்பவன். அதனால் இந்த வியாதிக்கு ரேடியேஷன் வைக்க அடையாறு அனுப்பச் சொன்னேன். இது ஒண்ணும் கிராஸ் பண்ற காரியமில்ல, நீங்க இதைப் புரிஞ்சுக்கங்கஎன்று கோபத்துடன் போய்விட்டார் சகாதேவன்.

மீண்டும் நர்சை அழைத்து யாழினியை அழைத்து வரச்சொன்னார் டாக்டர் சேவியர்.

யாழினி நுழைந்ததும், “யாழினி அவர் அந்தம்மாவுக்கு ரேடியேஷன் இப்ப வைக்கணும்னு சொல்றார். அப்படியே விட்டுருங்கஎன்றார் சேவியர்.

பேஷண்டுக்கு இப்ப ரேடியேஷன் தேவையில்லை டாக்டர். தொடர்ந்து இருபத்தோரு நாளைக்கு ஒரு தடவை இந்த ஹீமோதெரபி குடுத்துதான் அந்தப் பேஷண்டுக்கு எல்லாச் செல்களோடும் கேன்சர் செல்லையும் அழிக்கணும். இதுதான் ட்ரீட்மெண்ட் முறைஎன்றாள் யாழினி.

நீங்க இதற்குச் சரியான ரிசல்ட் கிடைக்க பேசாமல் டாக்டர் இஸ்மாயிலிடம் பேசுங்க. அவர் பார்த்துக்குவார்என்றார் சேவியர்.

அவர் இசபெல்லா ஆஸ்பிட்டலில் நடக்கும் டாக்டர்ஸ் கான்பரென்ஸ்க்குப் போயிருக்கார் டாக்டர். வந்ததும் பார்த்துச் சொல்றேன். இப்ப பேஷண்டை அனுப்பாமல் நிறுத்திவைக்கிறேன்என்றாள் யாழினி.

இதுதான் சரியான முடிவு. அவர் வந்ததும் அவர்ட்டே பேசிட்டுப் பிறகு முடிவெடுங்க. அவருடைய டிசிசன்தான் இறுதி முடிவுஎன்றார் சேவியர் சிரித்தபடி.

இப்படி வேலை செய்றதுக்கு உங்க கிளினிக்கிலே கூட நான் டாக்டராக வேலை செய்யலாம்என்று சிரித்தபடி வெளியேறினாள் டாக்டர் யாழினி.  

(தொடரும்)