“நம் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றம் இன்றைய குழந்தைகளைச் சார்ந்துள்ளது. அவர்கள்தான் நாளைய நாட்டை வழிநடத்தும் செல்வங்கள். துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய இனிய பருவத்தில் அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவது சட்டத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் முற்றிலும் புறம்பானது. குழந்தைகளின் அறிவை வளர்த்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.”
- மாண்புமிகு மு.க.
ஸ்டாலின்,
தமிழ்நாடு
முதலமைச்சர்
“பெண்களை மதிக்கவும், அவர்களுக்குச் சம உரிமை வழங்கவும்,
வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும், சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனவே, குழந்தைகளின் மீதான கண்காணிப்பு மிகவும் அவசியம். பெண் சமுதாயம் முன்னேறினால் தமிழ்ச் சமுதாயம் முன்னேறும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.”
- மாண்புமிகு அமைச்சர் பி.
கீதா
ஜீவன்
“பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கம்தான் அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். சமூக ஊடகங்கள் மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும். அதனால் நேர மேலாண்மை மிக முக்கியம். எனவே, சமூக ஊடகங்களுக்கு
மாணவர்கள் அடிமையாகிவிடக்கூடாது. மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது போதைப்பொருள் பழக்கம். போதைப்பொருள்களுக்கு இங்கே ஒரு தேவை இருக்கிறது. அதனால்தான் பிற மாநிலங்களில் இருந்து அது கடத்தி வரப்படுகிறது. அந்தத் தேவையை இல்லாமல் செய்வதில் மாணவர்களின் பங்கு முக்கியமானது.”
- திரு. சங்கர், ஆவடி
காவல்
ஆணையர்