1. பழைய ஏற்பாடு மற்றும் யூதப் பாரம்பரியம் பெண்களின் தார்மீக வலிமையை வலியுறுத்துகிறது. தாய்மை மற்றும் இஸ்ரயேலின் மீட்புக்காக எதிரிகளுடைய தாக்குதலிலிருந்து காப்பாற்ற வேண்டுவதன் மூலம் கடவுள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அவர்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. பெண்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் நல்லொழுக்கத்திற்காக மதிக்கப்படுகிறார்கள். யூதித்தைப் போன்ற உருவங்கள் குறிப்பாக, சமூகத்தால் அவர்களின் வீரம், ஞானம் மற்றும் போற்றத்தக்கக் குணங்களுக்காகக் கொண்டாடப்படுகின்றன. இந்த நற்பண்புகளை நிலைநிறுத்தவும், தெய்வீக வழிகாட்டுதலில் நம்பிக்கை வைக்கவும் மற்றவர்களை ஊக்குவிக்கிறது.
இத்தகைய
சிறப்புமிக்க மாதிரிகளாகிய திருவிவிலியக் கதாநாயகிகளுக்கிடையே, எதிர்மறைச் சான்றாக நிற்கக்கூடிய சில பெண்களின் பதிவுகளும் இல்லாமலில்லை. எடுத்துக்காட்டாக, சிம்சோனின் இறைவாக்குரைக்கும் திறமையைச் சீரழித்த தெலீலா (நீத 16:4-21), சாலமோனின் முதிர்ந்த வயதில் அவருடைய இருதயத்தை ஆண்டவரிடமிருந்து திருப்பி மற்ற தெய்வங்களை வணங்கச் செய்த அந்த வெளிநாட்டுப் பெண் (1அர 11:1-8), இறைவனின் அனைத்து இறைவாக்கினர்களையும் கொன்றழித்த ஈசபேல் (1அர 18:13), ஆகாபிற்கு அவருடைய திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பதற்காக நாபோத்தைக் கொன்றவள் (1அர 21) மற்றும் யோபுவின் துன்ப காலத்தில் அவரை அவமதித்து, கடவுளைச் சபிக்கத் தூண்டிய அவருடைய மனைவி (யோபு 2:9).
இந்த
நிகழ்வுகளில், பெண்களின் நடத்தையானது ஏவாளுடைய செயல்களை நினைவுபடுத்தக்கூடியதாக இருக்கின்றது. இருப்பினும், திருவிவிலியத்தின் பொதுவான கண்ணோட்டமானது பெண்ணைக் கடவுளின் தோழியாகப் (ally of God) பார்க்கின்ற தொடக்க நற்செய்தியினால் (Proto-Gospel) தூண்டப்பட்டதாக
இருக்கின்றது.
பெண்ணானவள் ஆண்டவரின்
விலைமதிப்பற்ற
கொடையாவாள்!
2. உண்மையில்,
உண்மையான இறைவனிடமிருந்து சாலமோனைத் திருப்பினார்கள் என்று அந்நிய நாட்டுப் பெண்கள் குற்றம் சாட்டப்படுவார்களேயானால், அதற்கு மாறாக ரூத்து புத்தகமானது ஓர் அந்நிய நாட்டுப் பெண்ணை மிகச்சிறந்தவளாகவும் நமக்குக் காட்டுகின்றது.
மோவாபு நாட்டுப் பெண்ணான ரூத்தின் பக்தி, நேர்மை, தாழ்ச்சி மற்றும் தாராள குணத்தில் அவளின் உறவினர்களுக்கு மாதிரியாக இருந்தாள். மேலும், இஸ்ரயேலின் வாழ்வு மற்றும் நம்பிக்கையைப் பகிர்ந்து, தாவீதின் கொள்ளு பாட்டியாகவும், மெசியாவின் மூதாதையராகவும் திகழ்ந்தாள். நற்செய்தியாளராகிய மத்தேயு இயேசுவின் மூதாதையர் பட்டியலில் அவளுடைய பெயரையும் சேர்த்து, மனுக்குலம் அனைத்திற்கும் கடவுளின் இரக்கத்தைப் பரப்புகின்ற உலகளாவிய தன்மைக்கான அடையாளமாகவும் (A sign of universality) அவளை
ஆக்குகின்றார்.
முதல்
நற்செய்தியாளர், கடவுளுடைய நன்மைத்தனமானது பாவத்தைவிடச் சிறந்தது என்பதை அறிவிப்பதற்காக, இயேசுவின் மூதாதையர்களுக்குள் தாமார், இராகாபு மற்றும் உரியாவின் மனைவியான பத்சேபா என்ற மூன்று பாவிகளான ஆனால், சீர்கேடற்றப் பெண்களையும் மெசியாவின் மூதாதையர் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறார். கடவுளின் அருள் வழியாக, கடவுள் திருமணச்
சட்டங்களுக்கு எதிரான அவர்களின் நிலைகளைப் பிற்காலத்தில் மெசியாவின் பிறப்பிற்கான தயாரிப்பில் கடவுளின் மீட்புத் திட்டத்திற்குப் பங்களிப்பவர்களாக ஆக்குகின்றார் (God, through His boundless grace, employs irregular marriages as
divine instruments to fulfil His sacred and eternal salvation plan for humanity).
ரூத்திடமிருந்து
வேறுபட்ட, தாழ்மையான அர்ப்பணிப்புக்கு மற்றோர் உதாரணம், இப்தாவின் மகள், அம்மோனியர்களுக்கு எதிரான தனது தந்தையின் வெற்றியைக் கொண்டாடுவதற்குத் தன் உயிரைத் தியாகம் செய்ய ஒப்புக்கொள்கிறாள் (நீத 11:34-40). அவளது சோகமான விதியைத் துக்கத்தில் அவள் எதிர்க்கவில்லை. ஆனால், அவளது மரணத்தை ஏற்றுக்கொள்கிறாள். அந்த நேரத்தில் இன்னும் பொதுவான பழமையான பழக்கவழக்கங்களில் வேரூன்றிய பெற்றோரின் தூண்டுதலான சபதத்தை நிறைவேற்றுகிறாள் (எரே 7:31; மீக் 6:6-8).
3. ஞான
இலக்கியமானது (Sapiential Literature) பெண்ணின்
குறைகளை அடிக்கடிக் குறிப்பிட்டாலும், அவளில் மறைந்திருக்கும் செல்வத்தையும் எடுத்தியம்புகின்றது. “நல்ல மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்”
(நீமொ 18:22) என்று நீதிமொழிகள் புத்தகமானது பெண்மையைப் பற்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாராட்டுகளையும் வெளிப்படுத்தி, பெண்ணானவள் ஒரு விலைமதிக்க முடியாத ஆண்டவருடைய கொடை என்று கூறுகின்றது.
அதே
புத்தகத்தின் இறுதியில் உயர்வான பெண் பற்றியதொரு பிம்பமானது விவரிக்கப்பட்டுள்ளது. அடைய முடியாததொரு மாதிரியைக் குறித்துக்காட்டாத (far from representing an unattainable model), மிகவும் மதிக்கத்தக்கதொரு பெண்ணின் அனுபவத்திலிருந்து பிறந்த அவள் ஒரு நிலையான மாதிரியாக இருக்கின்றாள் என்று கூறுகின்றது: “திறமை வாய்ந்த, மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்” (நீமொ
31:10).
ஞான
இலக்கியமானது, தெய்வீக உடன்பாட்டிற்கான பெண்ணின் நம்பகத்தன்மையில் அவளுடைய திறமைகளின் உச்சநிலையைக் காண்கின்றது. உண்மையில், சில வேளைகளில் அவள் நம்மை ஏமாற்ற முடிந்தாலும், அவளின் உள்ளமானது கடவுளுக்கு விசுவாசமுள்ளதாக இருக்கின்றபொழுது எல்லாவித எதிர்பார்ப்புகளையும் கடந்துசெல்கின்றாள் என்று கூறுகின்றது: “எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்” (நீமொ
31:30). தாயானவள் மதிப்புமிக்கப் புகழ்ச்சிக்குத் தகுதியானவளே!
4. இந்தச்
சூழலில் 2மக்கபேயர் நூலானது, அந்தியோக்கிய எபிஃபானெஸ், இறைவார்த்தைக்காக உயிர்த்தியாகம் செய்த ஏழு சகோதரர்களின் தாயின் கதையில், சோதனையின்போதும் அவளிடமிருந்த வியக்கத்தக்க, மிக உன்னதமான மாண்பின் மாதிரியைத் தூக்கிப்பிடிக்கின்றது.
அந்த
ஏழு சகோதரர்களின் இறப்பை விவரித்த பிறகு அந்நூலின் ஆசிரியர், “எல்லாருக்கும் மேலாக அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர்; பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தன் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்டபோதிலும், ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக்கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்; பெருந்தன்மை நிறைந்தவராய் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிச்சலையும் இணைத்து அவர்களிடம் பேசினாள்.” இவ்வாறு உயிர்த்தெழுதல் பற்றிய அவளுடைய எதிர்கால நம்பிக்கையை வெளிப்படுத்தி, “நீங்கள் என்
வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்;
உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்று சேர்த்ததும் நான் அல்ல; உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில், அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை” (2மக்
7:20-23) என்று விவரிக்கின்றார்.
இறைக்கட்டளைக்குக்
கீழ்ப்படிய மறுப்பதைவிட, இறப்பதற்குத் தன்னையே கையளிப்பது மேல் என்று அவளுடைய ஏழாவது மகனைத் தூண்டி, ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் படைத்த கடவுளின் செயலில் அவளுடைய நம்பிக்கையை அந்தத் தாயானவள் வெளிப்படுத்துகின்றாள்: “குழந்தாய், உன்னை நான் வேண்டுவது; விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்றுநோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால், நீ உன் சகோதரர்களுக்கு
ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு.
இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்” என்று
கூறி ஊக்கமூட்டினார் (2மக் 7:20-23).
ஏழுமுறை
இதயத்தில் சித்திரவதை அனுபவித்த
பிறகு அசைக்க முடியாத நம்பிக்கை, அளவிட முடியாத எதிர்நோக்கு மற்றும் வீரமுள்ள துணிவுக்குச் சான்றுபகர்ந்து, கொடூரமான சாவிற்குத் தன்னையே கையளிக்கின்றார்.
இறையருள்
வெளிப்படுகின்ற வியத்தகு செயல்கள் இத்தகைய பெண்களில் மிகவும் உன்னதமானவராக, ஆண்டவரின் தாய் மரியாவை நாம் காண்கின்றோம்.
மூலம்:
John Paul II, Ideal woman is a precious treasure, in
“L’Osservatore Romano”, Weekly Edition in English, 17 April 1996,
p.7.