இளைஞராக இருந்தாலும் ‘இறைவனுக்குப் பணிசெய்ய வேண்டும்’ என்ற துணிவு புனித நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு நவம்பர் 20 புதன் மறைக்கல்வியின்போது 2025 ஏப்ரல் 27 அன்று மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ், பியர் ஜியோர்ஜியோ மற்றும் கார்லோ அகஸ்திஸ் ஆகியோருக்கு 2025 ஏப்ரல் 27 புனிதர் பட்டம் வழங்குவதை அறிவித்த நிலையில் அவரது மறைவினால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 14-ஆம் லியோ செப்டம்பர் 7 ஞாயிறு அன்று அளிக்க இருப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.