ஈரான் மற்றும் இஸ்ரயேலில் அண்மையில் நடக்கும் போர் குறித்துப் பேசிய திருத்தந்தை, அணுசக்தி அச்சுறுத்தலிலிருந்து விடுபட்ட ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மரியாதையுள்ள சந்திப்புகள் மற்றும் நேர்மையான உரையாடல்கள் வழியாகத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நீதி, உடன்பிறந்த உணர்வு, பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, அமைதிக்கான காரணத்தை ஆதரித்தல், நல்லிணக்கப் பாதைகளைத் தொடங்குதல், அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் மாண்பை உறுதி செய்யும் தீர்வுகளை ஊக்குவித்தல் போன்றவை அனைத்து நாடுகளின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.