“பூமி கிரகத்தைக் காக்கவும், வளங்களைப் பாதுகாக்கக் கூட்டாக உழைக்கவும் மக்கள் மீண்டும் உறுதி ஏற்க வேண்டும். சுற்றுச்சூழலைக் காப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கூட்டு முயற்சிகள் எதிர்காலத் தலைமுறையினருக்கான பசுமைப் பூமியை உருவாக்க வழி வகுக்கும்.”
- மாண்புமிகு திரௌபதி முர்மு,
குடியரசுத்
தலைவர்
“மக்கள்தொகைக்
கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறு வரையறையும் தற்செயலானவை இல்லை. தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து, நம் வாசற்படிவரை வந்துவிட்டது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. நமது மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ள ஒரே காரணத்திற்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.”
- மாண்புமிகு மு.க.
ஸ்டாலின்,
தமிழ்நாடு
முதலமைச்சர்
“தமிழ்
அல்லாத ஒரு மொழி, திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் 73 மொழிகள் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும், பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும். மற்றவை யாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள்தாம். இந்த நான்கு மொழிகளில் மிகப் பழமையான இலக்கியங்களைத் தமிழ் கொண்டுள்ளது.”
திரு. பழ.
நெடுமாறன்,
தலைவர், உலகத் தமிழர்
பேரமைப்பு