இன்று நாம் அனைவரும் ஒலி கடிக்கும், அமைதியை ஆரவாரத்தில் தேடும் அலை யழுந்திய கப்பலென, ஒலி ஒழுங்குகளை உடைக்கும் யுகத்தில் வாழ்கிறோம்.
ஒரு
சிக்கலான சூழ்நிலை உள்ளடக்கிய ஒரு விரைவான பந்தயத்தில் பயணிக்கின்ற நம்மை, எல்லாக் காலத்திலும் மிகவும் பிரபலமான திருவிவிலியப் பகுதி ஒன்றை நினைவுகூர திருத்தந்தை லியோ அவர்கள் தனது இரண்டாவது புதன் மறைக்கல்வி உரையில் ‘நல்ல சமாரியன்’
உவமை குறித்து எடுத்துரைத்தார்.
“போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற திருச்சட்ட அறிஞரின் கேள்விக்கு, “உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக” (இச
6:5); “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்
மீதும் அன்பு கூர்வாயாக”
(லேவி 19:18) என்ற இயேசுவின் பதிலுக்குத் தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்ளும் பொருட்டு ‘எனக்கு அடுத்திருப்பவர் யார்?’ என்று கேட்கும் திருச்சட்ட அறிஞரின் வார்த்தைகளைக் கொண்டு திருத்தந்தை லியோ பகிர்ந்து கொண்டதாவது:
“இன்று நான் ஒரு நிபுணர், அறிவுள்ள நபர், சட்டத்தின் மருத்துவர் பற்றி உங்களுடன் பேச விரும்புகிறேன், இருப்பினும் அவர் தனது கண்ணோட்டத்தை மாற்றவேண்டும், ஏனென்றால் அவர் தன்னை மையமாகக் கொண்டு மற்றவர்களைக் கவனிக்கவில்லை” (லூக்கா
10:25-37).
உண்மையில்
நிலைவாழ்வு எந்த வழியில் மரபுரிமையாக வருகிறது என்று அவர் இயேசுவிடம் கேள்வி கேட்கிறார். ஆனால், இந்தக் கேள்விக்குப் பின்னால் ஒருவேளை மறைக்கப்பட்டுள்ள கவனத்தின் தேவையே துல்லியமான கேள்வியாக இருக்கலாம். இயேசு விளக்குமாறு அவர் கேட்கும் ஒரே வார்த்தை ‘அருகில் இருப்பவர்’
என்று பொருள்படும் ‘அடுத்திருப்பவர்’ என்ற
சொல்.
எனக்கு அடுத்திருப்பவர்
யார்?
புதுமை
மற்றும் ஆச்சரியத்தைப் பொறுத்தவரை நல்ல சமாரியனின் உவமை சிறந்தது. கதையின் போக்கில், அடித்து நொறுக்கப்பட்ட மனிதனைப் பார்த்து குரு ‘கடந்து சென்றார்’
என்று பார்க்கிறோம். அதேபோல், லேவியனும் ‘கடந்து சென்றான்.’ திருச்சட்ட அறிஞரைப் போலவே இந்த இருவருக்கும் சட்டம் தெரியும், அவர்கள் தூங்கும்போது கூட அதை ஓதுவார்கள். ஆயினும்கூட, ஒரு சமாரியன் எந்தக் கற்பனையிலும் ‘அடுத்திருப்பவர்’ என்று
அழைக்க முடியாதவர். ஆனால் உவமையில், இச்சமாரியனே பாதிக்கப்பட்டவர்மீது இரக்கம் கொள்கின்றார்.
இரக்கம் என்பது
மனிதகுலத்தின்
வேள்வி!
விசுவாசிகளாக
இருப்பதற்கு முன், நாம் மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். இந்த இரக்கம் ஒரு பிச்சைக்காரனின் கிண்ணத்தில் ஒரு நாணயத்தை வீசுவது போன்ற ஒரு தொண்டு செயல் மட்டுமல்ல, இது உறவுகளை உள்ளடக்கியது. சமாரியன், “அவரைக் கவனித்துக்கொள்ளுங்கள், நான் திரும்பி வரும்போது கூடுதல் செலவுகளைச் சரிசெய்வேன்!” என்று கூறுகிறார்.
நல்ல
சமாரியனின் உவமையில் குருவும் லேவியனும் கேட்ட முதல் கேள்வி என்னவென்றால், ‘நான் இந்த மனிதனுக்கு உதவுவதை நிறுத்தினால், எனக்கு என்ன நடக்கும்?’ ஆனால், அவரது அக்கறையின் தன்மையால் நல்ல சமாரியன் கேள்வியை மாற்றினார், ‘நான் இந்த மனிதனுக்கு உதவுவதை நிறுத்தினால், அவனுக்கு என்ன நடக்கும்?’
ஆனால்
‘கடந்து செல்ல’,
‘உதவ மறுக்க’ நமக்கு எண்ணற்ற சாக்குகள் உள்ளன. நேரம் இல்லை, பணம் இல்லை, இப்போது இல்லை, நான் சோர்வாக இருக்கிறேன்... இது ஒரு போலிஸ் வழக்கை உள்ளடக்கும்! நான் வெகுதூரம் செல்லவேண்டும்! வேறு யாராவது உதவுங்கள்! அந்த மனிதன் காயம் அடைந்ததாக மட்டுமே பாசாங்கு செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம்... என் மோட்டார் சைக்கிளில் அடித்து நொறுக்கப்பட்ட ஒரு பெண்ணை நான் அழைத்துச்சென்றால் மக்கள் என்ன நினைப்பார்கள்? ‘கடந்து செல்ல’,
‘உதவ மறுக்க’ எனக்குக் காரணங்கள் ஆயிரமாயிரம்!…
எதை நான்
அடிக்கடி
‘கடந்து
செல்கின்றேன்?’
நீங்கள்
ஒரு நல்ல அண்டை வீட்டுக்காரராக, ஓர் ஆசிரியராக, ஓர் அரசு ஊழியராக, ஒரு கடைக்காரராக, ஒரு போலிஸ்காரராக, ஒரு குருவாக... வெளியில், தெருக்களில், நீர்நிலைகளில் குப்பைகளை வீசுவதைத் தவிர்க்கிறீர்களா? உரத்த இசை அல்லது ஒலிகளை உருவாக்குவதைத் தவிர்க்கிறீர்களா? அல்லது ‘ஹார்ன்’ அடிப்பது நமது சுற்றுப்புறங்களை, பொது அரங்குகளை மாசுபடுத்துகிறதா? பொது இடங்களில் தொலைப்பேசியைப் பயன்படுத்துவது மக்களுக்கு இடையூறு விளைவிக்கின்றதா? எவற்றை நான் அடிக்கடி ‘கடந்து செல்கின்றேன்?’
யாரை நாம்
அடுத்திருப்பவராகப்
பார்க்கிறோம்?
பொதுவாக,
நாம் அண்டை நாட்டவரை நமது மக்களாக நினைக்க விரும்புகிறோம். நமது நம்பிக்கை, நமது சமூகம், நமது நிறம் மற்றும் நமது சமூக வர்க்கம் என்கிற எண்ணம். ஆனால் இயேசு, நம் அடுத்திருப்பவர் முற்றிலும் வேறுபட்டவராக இருக்கலாம் என்று சிந்திக்க நமக்குச் சவால் விடுக்கின்றார்.
நமது
நேரம், அக்கறை மற்றும் கவனிப்புக்கு எவரும் தகுதியானவரல்லர் என்று நாம் கருதலாம். இருப்பினும், அனைவருமே நாம் நேசிக்க அழைக்கப்படும் அடுத்திருப்பவர்கள். திருச்சட்ட அறிஞர், “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று கேட்டிருந்தார். இயேசு அவரது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை; ஆனால், ஒரு நல்ல அடுத்திருப்பவராக இருக்கக் கூறினார். “நீயும் போய் அவ்வாறே செய்.” என்ன செய்ய வேண்டும்? என்று இயேசு நமக்குக் கூறவில்லை. மாறாக, மற்றவர்களைப் பற்றிய நமது மனப்பான்மையையும் சிந்தனையையும் மாற்றும்படி நம்மை அழைக்கிறார். இது மனமாற்றத்திற்கான அழைப்பு, யாரையும் விலக்காத வரவேற்பு மற்றும் திறந்த இதயத்தை உருவாக்குவதற்கான அழைப்பு. ஏனென்றால், நம் அடுத்திருப்பவரை நேசிப்பதில் நாம் கடவுளை நேசிக்கிறோம்.
இயேசுவின்
வார்த்தைகள் எளிமையானவைதாம்; ஆனால், அவை நம்மை முழுமையாய் மாற்றும் சக்தியைக் கொண்டவை. அவர் நம்மிடம் கேட்டுக் கொள்வது: ‘இறைவனை உண்மையாய் நேசியுங்கள்; அடுத்திருப்பவரையும் நம்மைப்போல் நேசியுங்கள்; இரக்கம் காட்டுங்கள்; சடங்குகளுக்குப் பதிலாக அன்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.’
நம்முடைய
உண்மையான பக்தி என்பது சடங்குகளின் புற அலங்காரங்களில் அல்ல; நாம் மற்றவர்களுக்குச் செயலில் காட்டும் அன்பிலும், இரக்கத்திலும் உள்ளது. அன்பு இல்லாத வழிபாடு வெறுமைதான். அன்புள்ள செயல்கள் இல்லாமல் பக்தியாக இருப்பது வீணாகும். நம்மை ஒன்றாக இருக்க அழைக்கும் இயேசுவைப் பின்பற்றும் நாம் பிறருக்கு நன்மை செய்வதில் நமது கரங்கள் அழுக்காக அனுமதிப்போம், தீட்டுப்படுத்திக்கொள்வோம்.
இரக்கம் காட்டுவோம், இறைவனைக் காண்போம். ஏனெனில், இரக்கமே இறைவனாக இருக்கின்றார்!