அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் இலண்டன் புறப்பட்ட ஏர் விமானம் சிறிது நேரத்திலேயே விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்த திருத்தந்தை 14-ஆம் லியோ, பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவும் தான் பிரார்த்தனை செய்வதாகவும், இறந்தவர்களின் ஆன்மாக்களை இறைவனின் இரக்கத்திற்கு ஒப்புக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.