மே 22 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க்கில் நடைபெற்ற ஆயுத மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கருத்தமர்வில் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா, “மிகவும் பலவீனமான மனிதர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகள், மனிதாபிமான பணியாளர்கள் உள்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துதல், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பை அழித்தல், அவசரத் தேவையில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகல் மறுக்கப்படுதல் ஆகியவை மனிதகுலத்திற்கான துயரமாக இருக்கின்றன” என எடுத்துரைத்தார்.