கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி இன்றுவரை உக்ரைன்மீது இரஷ்யா நடத்திய தாக்குதலால் 27,000-க்கும் மேற்பட்ட அப்பாவிக் குழந்தைகளும், 45,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். 31,867 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலைத் தனது ‘X’ தளப் பக்கத்தில் வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம், ‘மேலும் இன்னும் எத்தனை இளம் உயிர்கள் சிதைக்கப்பட வேண்டும்? இன்னும் எத்தனை எதிர்காலங்கள் திருடப்பட வேண்டும்?’ என்ற கேள்விகளையும், ‘குழந்தைகளுக்கு நிபந்தனையற்ற மற்றும் நீடித்த அமைதி வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளது.