news-details
இந்திய செய்திகள்
பொய்க்குற்றச்சாட்டுகளின் பேரில் அருள்சகோதரிகள் கைது!

சத்தீஸ்கரில் உள்ள  துர்க் நகரில் மனித வர்த்தகம் மற்றும் மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டில், அமல அன்னையின் அசிசி அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த வந்தனா பிரான்சிஸ், ப்ரீத்தி மேரி என்னும் இரண்டு அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்து தேசியவாத உணர்வோடு செயல்படும் பா... தலைமையிலான ஒன்றிய அரசு, சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். கிறித்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளையும், மதமாற்றத் தடைச்சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, கேரளக் கத்தோலிக்க ஆயர் பேரவையும், இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.