சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், கலாச்சாரத் தளங்களில் மிகவும் பின்தங்கி பிற்பட்ட நிலையில் உள்ள மக்களுக்குச் சிறப்புச் சலுகை வழியாகத்தான் முன்னேற்றம் அடையச் செய்ய முடியும் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியிலும் மன்னர் ஆட்சியிலும் சுதந்திர இந்தியாவிலும் தலைவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள்.
வரலாற்றில்
தலித் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார உரிமைகள் வர்ணாசிரமத் தர்மத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டது. மனித உரிமைகளைப் பிறப்போடு இணைக்கப்பட்ட சாதியின் அடிப்படையில் மறுப்பதை மனுதர்ம சாஸ்திரம் சட்டமாக்கியது. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் சமூக நீதி அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது தொடங்கப்பட்டது.
ஆண்டுதோறும்
ஆகஸ்டு 10-ஆம் நாள் கறுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, தலித் கிறித்தவர்களுக்குப் பட்டியல் வகுப்பினர் உரிமைகளை ஒன்றிய அரசு வழங்க தேசிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. பல்லாண்டு காலம் இந்தியக் கிறித்தவர் என்ற பிரிவில் தொடர்ந்து ஒதுக்கிட்டு உரிமைகளைப் பெற்று வந்தனர். 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளைச் சமயத்தின் பெயரால் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 சனாதிபதி ஆணையில் சனாதிபதி கையெழுத்திட்ட நாள் ஆகஸ்ட் 10-ஆம் நாள் கறுப்பு நாள் ஆகும்.
தலித் கிறித்தவர்களுக்கு
மறுக்கப்படும்
உரிமைகள்
அரசியல்
பிரிவு 341 அளிக்கும் ‘அரசியல் அதிகாரம் குடியரசுத் தலைவர் பட்டியலினச் சாதிகளின் பட்டியல் அளிப்பது’
என்று உள்ளது. ஆனால், முதல் குடியரசுத் தலைவர் திரு. இராஜேந்திர பிரசாத் அத்துமீறி, அரசியல் சாசனம் அளித்த அதிகாரத்தையும் கடந்து, ஓர் அநீதியான Constitution (Scheduled Caste) Order 1950 என்ற ஆணையை வெளியிட்டார். 1950 என்ற ஆணை 3-வது பத்தி ‘இந்து மதத்தைத் தழுவாத தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்தார் (SC) என்று
கருதப்படமாட்டார்’ என்று
கூறுகிறது. இந்த ஆணை சமயத்தின் அடிப்படையில் ஷெட்யூல்டு வகுப்பைச் சார்ந்த மக்களைப் பிரித்து, இந்து மதத்தைத் தழுவாத தலித் மக்களுக்கு உரிமைகளை மறுக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் சாதி (SC) பெயரால்
அளிக்கும் உரிமைகளைச் சமயத்தின் பெயரால் மறுக்கிறது. இந்த ஆணை அரசியல் நிர்ணயச் சாசன சட்டம் எண் 15/4, 46,330, 332,
341, 25 பிரிவுகளுக்கு
எதிராக அமைந்துள்ளது. சமய சார்பற்றத்தன்மையை ஒழிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் சாதியின் அடிப்படையில் அளிக்கின்ற உரிமைகளைச் சமயத்தின் பெயரால் மதம் மாறிய தலித் மக்களுக்கு இந்தக் குடியரசுத் தலைவரின் ஆணை மறுக்கிறது. இவ்வாணை திருத்தப்பட்டு, மதம் மாறிய சீக்கிய தலித் மக்களுக்கு 1956-ஆம் ஆண்டும், புத்தமத தலித் மக்களுக்கு 1990-ஆம் ஆண்டிலிருந்தும் பட்டியலின சலுகைகளையும் ஒதுக்கீட்டு உரிமைகளையும் அளிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசுகள் தொடர்ந்து தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியின் அடிப்படையில் அளிக்கும் பட்டியலின (SC) உரிமைகளை
மறுத்து வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, பாராளுமன்றம், சட்டமன்றம் உள்ளாட்சி அனைத்திலும் ஒதுக்கீட்டு உரிமைகள் அளிக்கப்படுகிறது. ஆனால், பட்டியலினத்தார்க்கு அளிக்கப்படும் சமூக நீதி, மதம் மாறிய கிறித்தவப் பட்டியலினத்தார்க்கு மறுக்கப்படுகிறது.
போராட்டம்
2010, ஆகஸ்டு 10-ஆம்
நாள் முதல் ஆண்டு தோறும் ‘கறுப்பு நாள்’ கண்டனத்தை வெளிப்படுத்தும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் மூலம் தலித் கிறித்தவர்கள் சம உரிமை பெறுவதற்கான
போராட்டங்களை, திட்டங்களை முன்னெடுக்கின்றது. 1992 முதற்கொண்டு நீதி ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறாகவும் கருத்துடன் கடைப்பிடிக்கப்பட்டது.
இப்போராட்டம்
சம நீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவைத் தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 70 ஆண்டுகளாகப் பேரணி மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளன.
மத்திய-மாநில தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளன. இச்சமூக நீதி பிரச்சினை அரசிய லாக்கப்பட்டு, தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.
கோரிக்கைகள்
ஒன்றிய
அரசு மே 2007 முதல் 18 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான குடியரசுத் தலைவரின் ஆணை 1950 பத்தி 3 முழுவதையும் நீக்கி, SC பட்டியலில்
சேர்க்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றவேண்டும்; 2004 முதல் 21 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு (WP 180/2004) விசாரணைக்குப்
பா.ச.க. அரசு
உடனே பதில் தரவேண்டும்; நீதித்துறை தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதி வழங்க வேண் டும்.
இந்த
அநீதியை ஒழித்து தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு, அரசினர் தலித் தீர்மானத்தை 19.04.2023 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க அரசினர் தலித் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்குக் கிறித்தவச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இத்தீர்மானம் நிறைவேற உதவிய அனைவருக்கும் நன்றி கூறுகிறது.
பா.ச.க. கொள்கையின்
அடிப்படையில் சிறுபான்மையினருக்கு உரிமைகளை முற்றிலுமாக மறுக்கிறது. ஆகவே, பா.ச.க.
தொடக்கத்திலிருந்தே தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதியை மறுக்கிறது. பாராளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அநீதியாக எதிர்க்கிறது.
கிறித்தவச்
சமூகம் தாய்த்திருநாட்டிற்கு எண்ணற்ற நன்மைகளை ஆற்றி வருகிறது. கல்விச் சேவையில் அனைவரும் பாராட்டும் வகையில் அர்ப்பணத்தோடு செயல்படுகிறது. கிறித்தவ மக்கள்தொகை 2.5% உள்ளது. அதில்
தலித் கிறித்தவர் 1.5% அவர்களுக்குப் பட்டியலின
அந்தஸ்து ஒதுக்கீட்டு உரிமையை அளிப்பதால் மற்றவர்களுக்கு இழப்பில்லை. ஆகவே, இவர்களுக்குச் சமூக நீதி அடிப்படையில் பட்டியலினத்தார் உரிமைகளைப் பா.ச.க.
மறுப்பது மாபெரும் அநீதியாகும். தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சமூக நீதியை நிலைநாட்டும் செயலாகும்.
உச்ச
நீதிமன்ற வழக்கில் நீதி கிடைக்கவும், ஒன்றிய அரசு தலித் கிறித்தவர்களைப் பட்டியலினத்தார் (Scheduled Caste) பட்டியலில்
சேர்த்துச் சமூக நீதி வழங்கவும், இந்தியத் திரு அவை தேசிய அளவில் தொடர்ந்து போராட வேண்டும்.
போராடுவோம்,
சமூக நீதியை வென்றெடுப்போம்!