“அனைத்துலக மனிதாபிமான சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். மேலும், மக்களைக் கட்டாயமாக இடமாற்றம் செய்வதைத் தடை செய்தல் வேண்டும்.”
- ஜூலை 21, பாலஸ்தீன அதிபர்
மஹ்மூத்
அப்பாசுடன்
தொலைப்பேசி
உரையாடல்
“விபத்தில் இறந்தவர்களுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலும், காயமடைந்தவர்களுக்கு விரைவில் நலமும் இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிச் சமூகத்திற்கு அமைதியும் கிடைக்கப்பெறுவதாக.”
- ஜூலை 23, வங்கதேச விமான
விபத்து
இரங்கல்
செய்தி
“மனிதநேயத்திலும் ஆன்மிகத்திலும் நற்செய்தியைப் பிரதிபலிக்கும்படி நாம் மாறிட வேண்டும். இதனால் நாம் இயேசு கிறிஸ்துவின் அதே மனப்பான்மை உடையவர்களாக இருக்க முடியும்.”
- ஜூலை 25, குருத்துவ உருவாக்கப்
பணியாளர்களுக்கான
செய்தி
“உரையாடலின் மூலம் பகையை மங்கச்செய்வதையும், நீதி நடைமுறைப்படுத்தப்படுவதையும்,
மன்னிப்பு மதிக்கப்படுவதையும் கற்றுக்கொள்ளலாம்.”
- ஜூலை 26, Pax
Christi USA தேசிய மாநாடு.
“கடவுளின் நன்மை, பொறுமை மற்றும் இரக்கத்தினால் நம்மை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்; இதனால், கண்ணாடியில் பிரதிபலிப்பதுபோல், அவர் முகம் நம் முகத்தில் பிரதிபலிக்கக்கூடியதாக அமையும்.”
- ஜூலை 27, மூவேளைச் செபம்