news-details
இந்திய செய்திகள்
கேரளாவில் மறைந்த மேனாள் முதல்வருக்கு தலத்திரு அவை அஞ்சலி!

கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், மேனாள் மாநில முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் தனது 101 வயதில் மரணித்தார். அவரது மறைவுக்குக் கேரளக் கத்தோலிக்க ஆயர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றிய வி.எஸ். அச்சுதானந்தன் அவர்கள், சமூக நீதி, ஊழலை எதிர்த்துப் போராடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் நலனுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும், தனது 80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும், பொதுமக்களின் தலைவராகவும், அரசியல் பிளவுகளைத் தாண்டி, அசைக்க முடியாத கொள்கைப் பிடிப்புள்ளவராகவும் உருவெடுத்தார் என்றும் சீரோ-மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர் ஆயர் இரபேல் தட்டில் அவரைப் பாராட்டியுள்ளார்.